இந்தியாவில் இன்றைய கொரோனா பாதிப்பு: புதிதாக 16,752 பேருக்கு தொற்று; மேலும் 113 பேர் பலி + "||" + Corona infection in India today: 16,752 new infections; Another 113 were killed
இந்தியாவில் இன்றைய கொரோனா பாதிப்பு: புதிதாக 16,752 பேருக்கு தொற்று; மேலும் 113 பேர் பலி
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,752 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனாவின் கொடூரம் சமீப காலமாக குறைந்து வந்தது ஆனால் தற்போது கடந்த சில தினங்களாக புதிதாக தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,752 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,10,96,731 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 113 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,57,051 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 11,718 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,07,75,169 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 1,64,511 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 1,43,01,266 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.