மாநில செய்திகள்

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பநிலை உயரும் - வானிலை மையம் தகவல் + "||" + Temperatures will rise in 8 districts in Tamil Nadu for the next 2 days - Meteorological Center information

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பநிலை உயரும் - வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பநிலை உயரும் - வானிலை மையம் தகவல்
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு 8 மாவட்டங்களில் வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி உயரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் வரும் மார்ச் 4 ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும் என்று தெரிவித்துள்ளார். மேலும் அடுத்த 2 நாட்களுக்கு மதுரை, திருச்சி, தர்மபுரி, நாமக்கல், கரூர், சேலம், வேலூர், திருப்பத்தூர் ஆகிய 8 மாவட்டங்களில் வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்று அவர் கூறியுள்ளார்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வெப்பநிலை அதிகபட்சமாக 34 டிகிர், குறைந்தசபட்சமாக 22 டிகிரி செல்சியஸ் அளவிற்கு இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 7,987 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை தகவல்
தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் 7,987 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
2. தமிழகத்தில் 61 நாள் மீன்பிடி தடைகாலம் தொடங்கியது மீன்களின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு
மீன்கள் இனப்பெருக்கத்துக்காக தமிழகத்தில் 61 நாட்கள் அடங்கிய மீன்பிடி தடைகாலம் அமலுக்கு வந்தது. இதனால் மீன்கள் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
3. தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படாது அதிகாரி தகவல்
தமிழகத்தில் கொரோனா பரவல் மின்னல் வேகத்தில் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
4. தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில், தினசரி கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்தை நெருங்கியது
தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 7,819 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,984 பேருக்கு கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,47,129 ஆக உயர்ந்துள்ளது.