தேசிய செய்திகள்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 15,510 பேருக்கு கொரோனா பாதிப்பு மேலும் 106 பேர் பலி + "||" + In the last 24 hours in India, 15,510 new corona infections have killed another 106 people

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 15,510 பேருக்கு கொரோனா பாதிப்பு மேலும் 106 பேர் பலி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 15,510 பேருக்கு கொரோனா பாதிப்பு மேலும் 106 பேர் பலி
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 15,510 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனாவின் கொடூரம் சமீப காலமாக குறைந்து வந்தது ஆனால் தற்போது கடந்த சில தினங்களாக புதிதாக தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 15,510 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,11,12,241 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 106 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,57,157 ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 11,288 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,07,86,457 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 1,68,627 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 1,43,01,266 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 21 கோடியே 68 லட்சத்து 58 ஆயிரத்து 774 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன என்றும், அதில் நேற்று ஒருநாளில் மட்டும் 6,27,668 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ்-க்கு கொரோனா தொற்று உறுதி
தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ்-க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.50 கோடியை தாண்டியது: புதிய உச்சமாக 2,73,810 பேருக்கு தொற்று உறுதி
இந்தியாவில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக ஒரேநாளில் 2,73,810 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த 12 நாட்களில் 8%-ல் இருந்து 16.69% ஆக அதிகரிப்பு - மத்திய அரசு
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த 12 நாட்களில் 8%-ல் இருந்து 16.69% ஆக அதிகரித்துள்ளதாக மத்திய அரசுதெரிவித்துள்ளது.
4. இந்தியாவில் புதிய உச்சமாக ஒரேநாளில் 2,61,500 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 1,501 பேர் பலி
இந்தியாவில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக ஒரேநாளில் 2,61,500 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. இந்தியாவில் புதிதாக 2,34,692 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 1,341 பேர் பலி
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,34,692 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.