மாநில செய்திகள்

பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் விலை உயர்வு பாஜகவின் வெற்றியை பாதிக்காது - தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் + "||" + Rising petrol, diesel and cylinder prices will not affect BJP's victory - Tamil Nadu BJP leader Murugan

பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் விலை உயர்வு பாஜகவின் வெற்றியை பாதிக்காது - தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்

பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் விலை உயர்வு பாஜகவின் வெற்றியை பாதிக்காது - தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்
பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் விலை உயர்வு பாஜகவின் வெற்றியை பாதிக்காது என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை, 

தமிழகத்தில் ஏப்ரல் 6-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரதான கட்சியான அ.தி.மு.க. தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளது.

இதனைத்தொடர்ந்து சென்னை வந்த மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினர். 

இந்நிலையில் பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் விலை உயர்வு பாஜகவின் வெற்றியை பாதிக்காது என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “தொகுதிப்பங்கீடு விவகாரத்தில் அதிமுக-பாஜக இடையே எந்த இழுபறியும் கிடையாது. 2 நாளில் இறுதியாகும். பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் விலை உயர்வு பாஜகவின் வெற்றிக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது. அதிமுக கூட்டணி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காகவே தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகிறோம். கூட்டணியில் தேமுதிகவின் நிலை பற்றி அதிமுகதான் முடிவெடுக்கும். அமமுகவை அதிமுகவுடன் இணைப்பது தொடர்பாக சம்மந்தப்பட்டவர்கள் தான் முடிவு செய்வார்கள். சட்டமன்றத்திற்கு இரட்டை இலக்கத்தில் பாஜக எம்.எல்.ஏக்கள் செல்வார்கள். தமிழக அரசியலில் பாஜகவின் பங்கு முக்கியமானது” என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஏப்ரல் 14: இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்
சென்னையில் 15-வது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.92.58க்கும் டீசல் லிட்டருக்கு 85.88 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது.
2. இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி ஒரே விலையில் நீடிக்கிறது.
3. சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி ஒரே விலையில் நீடிக்கிறது.
4. சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் கடந்த 6 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி ஒரே விலையில் நீடிக்கிறது.
5. பெட்ரோல், டீசல் விலை வரும் நாட்களில் மேலும் குறையும்: மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தகவல்
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளையின் விலை மேலும் குறைய வாய்ப்பு இருப்பதாக மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.