தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் + "||" + Union minister Ravi Shankar Prasad gets his first Covid vaccine shot in Patna

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்
மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.
புதுடெல்லி, 

நாடு முழுவதும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ள நிலையில் முதல் நாளில் மட்டும் 1.25 லட்சம் பேர் ஊசி போட்டுக்கொண்டுள்ளனர். நாட்டில் மருத்துவர்கள் உள்ளிட்ட முன் களப்பணியாளர்களுடன் சேர்த்து இதுவரை ஒட்டுமொத்தமாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எண்ணிக்கை ஒரு கோடியே 47 லட்சத்தை கடந்துள்ளது. 

2-வது கட்ட தடுப்பூசி திட்டத்தின் முதல் நாளில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் மோடி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். அவரைத்தொடர்ந்து உள்துறை மந்திரி அமித் ஷா, வெளியுறவுத் துறை மந்திரி ஜெய் சங்கர், ஒடிஷா முதல்-மந்திரி நவீன் பட்நாயக், பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் உள்ளிட்டோரும் முதல் நாளில் தடுப்பூசி போட்டுக்கொண்டக் கொண்டனர். இதன்படி இன்று மத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், தேசிய மாநாட்டு கட்சி எம்.பி., பரூக் அப்துல்லா, டிஆர்எஸ் எம்.பி., கே. கேசவராவ், அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.  

இந்நிலையில் பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இன்று முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். 

தொடர்புடைய செய்திகள்

1. ஈரோடு மாவட்டத்துக்கு மேலும் 5 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள்; கலெக்டர் சி.கதிரவன் தகவல்
ஈரோடு மாவட்டத்துக்கு மேலும் 5 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் வரப்பெற்றதாக மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்து உள்ளார்.
2. பெரம்பலூர் மாவட்டத்திற்கு போதிய அளவு கொரோனா தடுப்பூசி உள்ளது
பெரம்பலூர் மாவட்டத்திற்கு போதிய அளவு கொரோனா தடுப்பூசி உள்ளதாக கலெக்டர் தரிவித்தார்.
3. கொரோனா தடுப்பூசி செலுத்தியதால் விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்படவில்லை - மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்
கொரோனா தடுப்பூசி செலுத்தியதால் நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்படவில்லை என மருத்துவமனை நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.
4. ஏழைநாடுகளை சேர்ந்த 8 லட்சம் பேருக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்குகிறது நியூசிலாந்து
ஏழைநாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் கீழ் உலக சுகாதார அமைப்பு, ஐ.நா. இணைந்து மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்காக நியூசிலாந்து அரசு ஏழைநாடுகளில் 8 லட்சம் பேருக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்குகிறது.
5. கொரோனா தடுப்பூசி முகாம்
விருதுநகரில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.