ஜான்சன் அண்ட் ஜான்சன் கொரோனா தடுப்பூசியின் தயாரிப்புக்கு மெர்க் மருந்து நிறுவனம் உதவும் - ஜோ பைடன் + "||" + American drugmaker Merck to help produce J&J's COVID-19 vaccine: Biden
ஜான்சன் அண்ட் ஜான்சன் கொரோனா தடுப்பூசியின் தயாரிப்புக்கு மெர்க் மருந்து நிறுவனம் உதவும் - ஜோ பைடன்
ஜான்சன் அண்ட் ஜான்சன் கொரோனா தடுப்பூசியின் தயாரிப்புக்கு அமெரிக்க மருந்து நிறுவனமான மெர்க் உதவும் என்று அமெரிக்க வெள்ளை மாளிகை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன்,
ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தார், கொரோனாவுக்கு எதிராக ஒற்றை டோஸ் தடுப்பூசியை உருவாக்கி உள்னனர். இதனைத்தொடர்ந்து இந்த ஒற்றை டோஸ் தடுப்பூசி பாதுகாப்பானதுதான் என்று அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எப்.டி.ஏ.) அறிவித்தது.
ஏற்கனவே அங்கு பைசர், மாடர்னா தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. அங்கு பைசர் மற்றும் மாடர்னா ஆகிய நிறுவனங்களின் தடுப்பூசிகளுக்கு அவசரகால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டு, 5 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவ்விரு தடுப்பூசிகளை விட ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன தடுப்பூசி விலை குறைவானதாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. மேலும் இந்த தடுப்பூசியை பிரிஜ்ஜில் வைத்து பாதுகாத்துக்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் ஜான்சன் அண்ட் ஜான்சன் தயாரிக்கும் ஒற்றை டோஸ் கொரோனா தடுப்பூசியின் அவசர கால பயன்பாட்டுக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எப்.டி.ஏ.) அனுமதி அளித்தது.
இந்நிலையில் கொரோனா தடுப்பூசியின் விநியோகத்தை விரைவாக விரிவுபடுத்தும் முயற்சியில் போட்டியாளரான ஜான்சன் அண்ட் ஜான்சனின் புதிதாக அங்கீகரிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசியை தயாரிக்க அமெரிக்க மருந்து நிறுவனமான மெர்க் அண்ட் கோ உதவும் என்று ஜோ பைடனின் நிர்வாக அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார்.
ஒற்றை டோஸ் தடுப்பூசி உற்பத்தியை விரைவுபடுத்தும் முயற்சியாக வெள்ளை மாளிகையில் இருந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது. அமெரிக்க மருந்து நிறுவனமான .
மெர்க்கின் உதவி ஜான்சன் அண்ட் ஜான்சனின் உற்பத்தி கடமைகளை பூர்த்தி செய்வதற்கும் விநியோகத்தை மேலும் விரிவுபடுத்துவதற்கும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி எதிர்பாராத உற்பத்தி சிக்கல்களை எதிர்கொண்டதாகவும், கடந்த சனிக்கிழமையன்று அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தைப் பெறுவதற்கு 3.9 மில்லியன் அளவை மட்டுமே உற்பத்தி செய்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே ஜூன் இறுதிக்குள் 100 மில்லியன் டோஸை வழங்குவதற்கான வேகத்தில் இருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.