சட்டசபை தேர்தல் - 2021

சட்டசபை தேர்தல்: வேளச்சேரி தொகுதியில் ராதிகா சரத்குமார் போட்டி + "||" + Assembly elections: radhika sarathkumar contest in Velachery constituency

சட்டசபை தேர்தல்: வேளச்சேரி தொகுதியில் ராதிகா சரத்குமார் போட்டி

சட்டசபை தேர்தல்: வேளச்சேரி தொகுதியில் ராதிகா சரத்குமார் போட்டி
தமிழக சட்டமன்ற தேர்தலில் வேளச்சேரி தொகுதியில் ராதிகா சரத்குமார் போட்டியிடுவார் என்று சமத்துவ மக்கள் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை

அதிமுக கூட்டணியிலிருந்து விலகிய சமத்துவ மக்கள் கட்சி, சட்டமன்ற தோ்தலில் இந்திய ஜனநாயகக் கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடப் போவதாக அறிவித்து உள்ளது. . இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலையும் சரத்குமார் கடந்த வாரம் சந்தித்துப் பேசினார். கூட்டணி குறித்து இறுதி முடிவை கமல் அறிவிப்பார் என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் இன்று நடைபெற்ற சமத்துவ மக்கள் கட்சியின் ஆறாவது பொதுக் குழுக் கூட்டத்தில் பேசிய துணைப் பொதுச் செயலாளர் விவேகானந்தன், சென்னை வேளச்சேரி தொகுதியில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் ராதிகா சரத்குமார் போட்டியிடுவார் என்று அறிவித்தார்.வேளச்சேரி தொகுதியில் திமுகவைச் சேர்ந்த  வாகை சந்திரசேகர் தற்போது எம்எல்ஏ-வாக உள்ளார்.

பொதுக்குழு கூட்டத்தில் தலைவராக சரத்குமார் போட்டியின்றி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.


தொடர்புடைய செய்திகள்

1. நீட் தேர்வு விவகாரம் : சட்டசபையில் காரசார விவாதம் அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு
நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக சட்டசபையில் திமுக - அதிமுக எம்எல்ஏக்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
2. வெப் தொடரில் சரத்குமார்
வெப் தொடர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளதால் அதிகம் தயாராகின்றன.
3. பெட்ரோலிய பொருட்களின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: சரத்குமார்
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
4. புதிய எம்.எல்.ஏ.க்கள் 9 பேர் இன்று பதவியேற்பு
தமிழகத்தில் இதுவரை பதவியேற்காத 10 புதிய எம்.எல்.ஏ.க்களில் 9 பேர் இன்று பதவியேற்றுக்கொண்டனர்.
5. தமிழகம்: புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்களில் 60 சதவீதம் பேர் மீது கிரிமினல் வழக்குகள்
தமிழ்நாட்டில் புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்களில் 60 சதப்வீதம் பேர்மீது கிரிமினல் வழக்குகள் இருக்கின்றன என ஜனநாயக சீர்திருத்தக் சங்க அறிக்கை கூறி உள்ளது.