தேசிய செய்திகள்

சீனா, பாகிஸ்தானின் அச்சுறுத்தல்களை சந்திக்க இந்திய ராணுவம் தயாராக இருக்க வேண்டும் - பிபின் ராவத் + "||" + Indian Army must be ready to face threats from China and Pakistan - Bipin Rawat

சீனா, பாகிஸ்தானின் அச்சுறுத்தல்களை சந்திக்க இந்திய ராணுவம் தயாராக இருக்க வேண்டும் - பிபின் ராவத்

சீனா, பாகிஸ்தானின் அச்சுறுத்தல்களை சந்திக்க இந்திய ராணுவம் தயாராக இருக்க வேண்டும் - பிபின் ராவத்
சீனா, பாகிஸ்தானின் அச்சுறுத்தல்களை சந்திக்க இந்திய ராணுவம் தயாராக இருக்க வேண்டும் என முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

தெலங்கானா மாநிலம் செகந்தராபாத்தில் உள்ள பாதுகாப்பு மேலாண்மை கல்லூரி சார்பில் தேசிய அளவிலான கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது. இதில் காணொலி காட்சி வாயிலாக முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் கலந்துகொண்டார். இந்த நிகழ்வின் போது அவர் பேசியதாவது;-

“நாடு சுதந்திரம் பெற்ற பின், அளவான போர் திறன்களை உடைய சிறிய படையாக இருந்த நம் ராணுவம், இன்றைக்கு நவீன போர் கருவிகளை உடைய, மிக வலுவான படையாக மாறியுள்ளது. போர்களின் தன்மைகளில், 20ம் நுாற்றாண்டில் பல்வேறு மாற்றங்களை சந்தித்துள்ளோம். பாதுகாப்பு விவகாரங்களில் பல சவால்களை சந்தித்து வருகிறோம். 

உலகின் பிற நாடுகளைச் சேர்ந்த ராணுவம் சந்தித்து வரும் சவால்களை விட, நம் ராணுவம் அதிக சவால்களை சந்தித்து வருகிறது. சீனா மற்றும் பாகிஸ்தானின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள, நம் ராணுவம் தயாராக இருக்க வேண்டும்.

மேலும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில், எதிர்காலத்தில் ஆதிக்கம் செலுத்த, சீனா கடுமையான முயற்சிகளில் ஈடுபடும். போர் திறன்களின் மாற்றத்தை உள்வாங்கி, அதை திறமையாகச் செயல்படுத்திய மற்ற நாடுகளின் படிப்பினைகளை, நாம் தெளிவாக கற்க வேண்டும்.”

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. 13 லட்சம் லிட்டர் அணுக்கதிர் கழிவுநீரை கடலில் கலக்கும் ஜப்பான் அரசின் முடிவுக்கு சீனா கண்டனம்
புகுஷிமாவில் அணு உலையில் இருந்து 13 லட்சம் லிட்டர் கழிவுநீரை கடலில் கலக்க முடிவு செய்துள்ளதாக ஜப்பான் அரசு கூறியுள்ளது.
2. சீனா: நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு; 21 தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரம்
சீனாவில் நிலக்கரி சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கிக்கொண்ட 21 தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
3. இந்தோனேசியாவில் பாகிஸ்தானியர் உள்பட 13 பேருக்கு மரண தண்டனை; போதைப்பொருள் கடத்தல் வழக்கில் பரபரப்பு தீர்ப்பு
இந்தோனேசியாவில் போதைப்பொருள் கடத்தல் கடுமையான குற்றமாக பார்க்கப்படுகிறது.
4. மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் ‘பாகிஸ்தான் ஆதரவு கோஷமிட்டால் சுட்டு கொல்லப்படுவார்கள்’; சர்ச்சையை கிளப்பிய பா.ஜனதா தலைவருக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ்
மேற்கு வங்காளத்தின் பிர்பும் மாவட்ட பா.ஜனதா தலைவரான துருவா சகா, நேற்று முன்தினம் நானூரில் பிரசாரம் மேற்கொண்டார்.
5. சீனாவுக்கு ரூ.5¼ கோடி மயில் இறகுகள் கடத்த முயன்ற வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றம்
சீனாவுக்கு ரூ.5¼ கோடி மயில் இறகுகள் கடத்த முயன்ற வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டுள்ளது.