உலக செய்திகள்

உலகம் முழுவதும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 11.62 கோடியை தாண்டியது + "||" + The number of corona victims worldwide has crossed 11.62 crore

உலகம் முழுவதும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 11.62 கோடியை தாண்டியது

உலகம் முழுவதும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 11.62 கோடியை தாண்டியது
உலகம் முழுவதும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11.62 கோடியை தாண்டியுள்ளது.
ஜெனீவா,

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.  தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.62 கோடியை தாண்டி உள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 11,62,02,198-பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 9,18,64,770- பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 25 லட்சத்து 80 ஆயிரத்து 588- பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 2,17,56,840-பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 90,080-பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 63,543 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரேசிலில் 74,285 பேருக்கும், ரஷ்யாவில் 11,385 பேருக்கும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. தனுஷ் பட வில்லன் உள்பட 2 நடிகர்களுக்கு கொரோனா
தமிழில் மாரி 2 படத்தில் தனுசுக்கு வில்லனாக நடித்தவர் டொவினோ தாமஸ். மலையாளத்தில் லூசிபர், வைரஸ், லூகா, தீவடி, கோதா உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருக்கிறார்.
2. கொரோனா பரவல் அதிகரிப்பு: வேளாண் அலுவலர் தேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டும்; டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-
3. கொரோனா 2-வது அலை அச்சம் அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரியலாம்; மத்திய அரசு அனுமதி
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாக பரவி வருவதையடுத்து, அமைச்சக ஊழியர்களும், துறை சார்ந்த அரசு ஊழியர்களும் வீட்டில் இருந்து பணிபுரியலாம் என மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
4. கொரோனா பாதுகாப்பு விதிமீறல்: கடந்த 3 மாதங்களில் 276 நிறுவனங்கள் மூடப்பட்டன துபாய் மாநகராட்சி தகவல்
துபாயில் கடந்த 3 மாதங்களில் மட்டும் 1 லட்சத்து 80 ஆயிரத்து 189 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும், இதில் விதிமுறைகள் மீறிய 276 நிறுவனங்கள் மூடப்பட்டதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
5. கொரோனா அறிகுறி இருந்தால் அலட்சியம் வேண்டாம்; புதுச்சேரி சுகாதாரத்துறை செயலாளர் வேண்டுகோள்
கொரோனா அறிகுறி இருந்தால் அலட்சியமாக இருக்கவேண்டாம் என்று சுகாதாரத்துறை செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.