மாநில செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை 6-வது நாளாக மாற்றமின்றி விற்பனை + "||" + Petrol and diesel prices remained unchanged for the 6th day

பெட்ரோல், டீசல் விலை 6-வது நாளாக மாற்றமின்றி விற்பனை

பெட்ரோல், டீசல் விலை 6-வது நாளாக மாற்றமின்றி விற்பனை
சென்னையில் இன்று 6-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னை,

சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை நிலவரங்களின் அடிப்படையில் இந்தியாவில் தினந்தோறும் பெட்ரோல்-டீசல் விலை மாற்றியமைக்கப்படுகிறது. அந்த வகையில் கொரோனாவுக்கு பிறகு தேவை அதிகரித்துள்ளதை தொடர்ந்து சுமார் ஓராண்டுக்குப் பிறகு முதல் முறையாக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 61 டாலரை எட்டியுள்ளது. 

இது இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலையில் எதிரொலித்து வருகிறது. அது மட்டுமின்றி இந்தியாவில் சில்லறை விற்பனையில் பெட்ரோல், டீசலுக்கு முறையே 61 சதவீதம் மற்றும் 56 சதவீதம் வரியை மத்திய-மாநில அரசுகள் விதிக்கின்றன. இதனாலும் எரிபொருள் விலை தொடர்ந்து உச்சம் பெற்று வருகிறது. இதனால் கடந்த சில தினங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

சென்னையில் கடந்த 5 நாட்களாக பெட்ரோல் லிட்டர் 93.11 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 86.45 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் 6-வது நாளாக இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. ஏப்ரல் 14: இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்
சென்னையில் 15-வது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.92.58க்கும் டீசல் லிட்டருக்கு 85.88 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது.
2. இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி ஒரே விலையில் நீடிக்கிறது.
3. சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி ஒரே விலையில் நீடிக்கிறது.
4. சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் கடந்த 6 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி ஒரே விலையில் நீடிக்கிறது.
5. பெட்ரோல், டீசல் விலை வரும் நாட்களில் மேலும் குறையும்: மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தகவல்
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளையின் விலை மேலும் குறைய வாய்ப்பு இருப்பதாக மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.