மாநில செய்திகள்

திமுக - கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி இடையே தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்து + "||" + DMK - Kongunadu Makkal Desiya katchi signs a constituency allocation agreement

திமுக - கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி இடையே தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்து

திமுக - கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி இடையே தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்து
திமுக - கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி இடையே தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.
சென்னை,

திமுக சார்பில் கூட்டணி கட்சிகளுடன் சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் நடத்தி முடிக்கப்பட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. இதையடுத்து எந்தெந்த தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்குவது என்பதை முடிவு செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. 

இதற்கிடையில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியுடன் திமுகவினர் 2 கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி முடித்துள்ளனர். நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி 5 தொகுதிகளை கேட்டதாகவும், திமுக 3 தொகுதிகளை கொடுக்க முன்வந்ததாகவும், இதன் காரணமாக தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை என்றும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் இன்று மாலை 5 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மற்றும் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி இடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இன்று நடைபெற்ற 3 ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. 

இதன்படி கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு 3 தொகுதிகளை திமுக ஒதுக்கீடு செய்துள்ளது. இதையடுத்து தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன் ஆகியோர் கையெழுத்திட்டனர். மேலும் தொகுதி பங்கீடு குறித்த பட்டியல் நாளை வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. நாளை பதவி ஏற்பு : அரசியல் கட்சியின் மூத்தத் தலைவர்களது இல்லங்களுக்கே சென்று வாழ்த்துப் பெற்ற மு.க ஸ்டாலின்
தமிழக முதல் அமைச்சராக நாளை பதவியேற்கவிருக்கும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று அரசியல் கட்சியின் மூத்தத் தலைவர்களை அவர்களது இல்லங்களுக்கே சென்று சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
2. தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் பதவியேற்பு; அழைப்பிதழ் வெளியானது
தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின், நாளை மறுநாள்( மே 7 ந்தேதி) காலை 9 மணிக்கு பதவியேற்கிறார். சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது.
3. ஆட்சி அமைக்க உரிமை கோரினார் மு.க ஸ்டாலின்; முதல்வரானதும் முதல் கையெழுத்து எந்த திட்டத்திற்கு..!
மு.க ஸ்டாலின் 133 எம். எல்.ஏக்கள் ஆதரவு கையெழுத்துடன் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ; பதவி ஏற்றதும் எந்த திட்டத்திற்கு முதல் கையெழுத்திடுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
4. தமிழக முதல்வராக வரும் 7 ஆம் தேதி பதவியேற்கிறார் மு.க ஸ்டாலின்
தமிழக முதல்வராக வரும் 7 ஆம் தேதி திமுக தலைவர் மு.க ஸ்டாலின்பதவியேற்க உள்ளார்.
5. தேனாம்பேட்டை காவல் ஆய்வாளர் முரளி பணி இடை நீக்கம்- இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை
திமுக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் அதிக அளவில் திரண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டதால் ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.