உலக செய்திகள்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரிய வழக்கு: இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு தள்ளுபடி + "||" + Pak high court rejects PTI lawmaker's petition challenging Gilani's win in Senate elections

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரிய வழக்கு: இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு தள்ளுபடி

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரிய வழக்கு: இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு தள்ளுபடி
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் யூசுப் ராசா கிலானி வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரிய வழக்கினை இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் மேல்சபையில், ஒரு தொகுதிக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில் அந்நாட்டு நிதி அமைச்சர் அப்துல் ஹபீஸ் ஷேக் தோல்வி அடைந்தார். முன்னாள் பிரதமர் யூசுப் ராசா கிலானி, அதில் வென்றார். 

இதையடுத்து, 'பிரதமர் பதவியில் இருந்து, இம்ரான்கான் விலக வேண்டும்' என, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின; இதனால் அரசியல் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து, நம்பிக்கை தீர்மானத்துக்கு தயாராக இருப்பதாக, பிரதமர் இம்ரான்கான் அறிவித்தார். நம்பிக்கை தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடத்த அதிபர் ஆரிப் ஆல்வி உத்தரவிட்டார்.

மொத்தம், 342 உறுப்பினர்கள் அடங்கிய, நேஷனல் அசெம்பிளியில், 172 பேரின் ஆதரவு பெற்றால் மட்டுமே பதவியில் தொடர முடியும் என்ற நிலையில் இம்ரான் கானுக்கு ஆதரவாக 178 பேர் ஓட்டளித்தனர். பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம் எனப்படும், 11 எதிர்க்கட்சிகள் அடங்கிய கூட்டணி, ஓட்டெடுப்பை புறக்கணித்து, வெளிநடப்பு செய்தது. நம்பிக்கை தீர்மானத்தை, வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி தாக்கல் செய்தார். ஓட்டெடுப்பில், இம்ரான் கான் வென்றதாக, சபாநாயகர் ஆசாத் குவாய்சர் அறிவித்தார். 

இதனிடையே பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் யூசுப் ராசா கிலானி வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரி வழங்கு தொடரப்பட்டது. 

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான வாதங்களை கேட்ட தலைமை நீதிபதி அதர் மினல்லா, வழக்கு விசாரணை தொடர்பாக பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தின் தளத்தை பயன்படுத்துமாறு மனுதாரருக்கு உத்தரவிட்டார்.

 மேலும் அரசியல் விஷயங்களில் நீதித்துறையை தேவையின்றி இழுப்பது பொருத்தமானதல்ல என்றும் நீதிபதி தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து அந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் விசாவை நீட்டிக்க இங்கிலாந்து மறுப்பு
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஊழல் வழக்கில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு லாகூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்ப்பட்டதை தொடர்ந்து அவரை லண்டன் அழைத்து சென்று சிகிச்சை அளிக்கவேண்டும் என அவரது மருத்துவர்கள் தெரிவித்தனர். அதை ஏற்று, இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு அவருக்கு 4 வாரங்களுக்கு ஜாமீன் வழங்கியது.
2. பாகிஸ்தான் முன்னாள் அதிபர் மருத்துவமனையில் அனுமதி
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
3. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் சொத்துகள் ஏலம் விடப்படுமா? ஊழல் தடுப்பு கோர்ட்டில் மனு தாக்கல்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சொத்துகளை ஏலம்விட வேண்டும் என்று கோரி ஊழல் தடுப்பு கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.