சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ திரைப்படம் ரம்ஜானுக்கு ரிலீஸ் - தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு + "||" + Sivakarthikeyan's 'Doctor' Movie Release For Ramadan - Production Company Announcement

சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ திரைப்படம் ரம்ஜானுக்கு ரிலீஸ் - தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு

சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ திரைப்படம் ரம்ஜானுக்கு ரிலீஸ் - தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு
‘டாக்டர்’ திரைப்படம் ரம்ஜான் பண்டிகைக்கு ரிலீசாகும் என்று அறிவித்துள்ள பட நிறுவனம், ரசிகர்களை தேர்தலில் மறக்காமல் வாக்களிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
சென்னை,

நடிகர் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ திரைப்படம் வரும் மார்ச் 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால், திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளிவைப்பது குறித்து படத்தயாரிப்பு நிறுவனம் ஆலோசித்து வந்தது. 

இதன்படி ‘டாக்டர்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளிவைப்பதாக பட நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் டாக்டர் படம் ரம்ஜான் பண்டிகைக்கு திரைக்கு வர இருப்பதாக தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது குறித்து பட நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரம்ஜான் பண்டிகைக்கு டாக்டர் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என்றும் அதுவரை உள்ள நேரத்தில் படத்தை மெருகேற்ற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரசிகர்கள் தேர்தலில் மறக்காமல் வாக்களிக்க வேண்டும் என்றும் படத்தயாரிப்பு நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. படங்களுக்கு தமிழில் தலைப்பு - சிவகார்த்திகேயன் விருப்பம்
சினிமா படங்களுக்கு தமிழில் தலைப்பு வைக்க நடிகர் சிவகார்த்திகேயன் வற்புறுத்தி உள்ளார்.
2. திரைப்படங்கள் தியேட்டர்களில் தான் ரிலீசாக வேண்டும் - நடிகர் சிவகார்த்திகேயன் விருப்பம்
திரைப்படங்கள் வெளியானால் தான் திரைத்துறையை நம்பியுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
3. சிவகார்த்திகேயன் படம் ரிலீஸ் குழப்பம் தீர்ந்தது
சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படப்பிடிப்பு முடிந்து கொரோனாவால் பல மாதங்களாக ரிலீசாகாமல் முடங்கி உள்ளது.
4. வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கம், யானையை நடிகர் சிவகார்த்திகேயன் தத்தெடுப்பு
வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆண் சிங்கம் மற்றும் ஒரு பெண் யானையை நடிகர் சிவகார்த்திகேயன் 6 மாத காலத்துக்கு தத்தெடுத்துள்ளார்.
5. சிவகார்த்திகேயன் பட டைரக்டர் பெயரில் மோசடி
நடிகர் நடிகைகள் பெயர்களில் சமூக வலைத்தளங்களில் கணக்குகள் தொடங்கி பண மோசடி நடப்பதாக ஏற்கனவே புகார்கள் வந்துள்ளன.