சட்டசபை தேர்தல் - 2021

புதுச்சேரியில் பாஜக-அதிமுக தொகுதி பங்கீட்டில் இழுபறி + "||" + BJP-AIADMK Alliance Seat Sharing Talks Not Finalised Till Now in Puducherry Assembly Elections

புதுச்சேரியில் பாஜக-அதிமுக தொகுதி பங்கீட்டில் இழுபறி

புதுச்சேரியில் பாஜக-அதிமுக தொகுதி பங்கீட்டில் இழுபறி
புதுச்சேரியில் பாஜக-அதிமுக தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வருகிறது. கேட்ட இடங்கள் கிடைக்காததால் அதிமுகவினர் அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுச்சேரி,

30 தொகுதிகளை கொண்ட புதுச்சேரி சட்டசபைக்கு ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

இத்தேர்தலில், பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் என்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு 16 தொகுதிகள் கொடுக்க உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. ஆனால், கூட்டணியில் இடம்பெற்றுள்ள அதிமுக மற்றும் பாமக கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக எந்த முடிவும் எட்டப்படாமல் உள்ளது.

இந்நிலையில், பாஜக-அதிமுக இடையேயான தொகுதி பங்கீடு தொடர்பாக நடந்த பேச்ச்சுவார்த்தையில் முடிவு தற்போதுவரை எட்டப்படாததால் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வருகிறது. கேட்ட இடங்கள் கிடைக்காததால் அதிமுகவினர் அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

புதுச்சேரி சட்டசபை தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக பாஜக-அதிமுக இடையே இழுபறி ஏற்பட்டுள்ளநிலையில் புதுச்சேரி அதிமுக எம்.எல்.ஏ. அன்பழகன், வையாபுரி மணிகண்டன், பாஸ்கரர், ஹசானா ஆகிய 4 பேர் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சேலத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்: என்.ஆர் காங்கிரஸ் அதிக இடங்களில் முன்னிலை
புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
2. புதுச்சேரி சட்டசபை தேர்தல்: மாலை 6 மணி நிலவரப்படி 78.03% வாக்குப்பதிவு
புதுச்சேரி சட்டசபை தேர்தலில் மாலை 6 மணி நிலவரப்படி 78.03% வாக்குப்பதிவாகியுள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
3. புதுச்சேரி சட்டசபை தேர்தல்: மாலை 5 மணி நிலவரப்படி 76.03% வாக்குப்பதிவு
புதுச்சேரி சட்டசபை தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 76.03% வாக்குப்பதிவாகியுள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
4. புதுச்சேரியில் பாமக போட்டியிடவில்லை... 10 தொகுதிகளில் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் திடீர் வாபஸ்
புதுச்சேரியில் போட்டியிட பாமக வேட்பாளர்கள் தாக்கல் செய்திருந்த வேட்புமனுக்களை இன்று திடீரென வாபஸ் பெற்றுள்ளனர்.
5. புதுச்சேரியில் காங்கிரஸ் அலுவலகத்தில், மேலிட பொறுப்பாளர்களை முற்றுகையிட்ட நிர்வாகிகள்
புதுச்சேரியில் திமுகவுக்கு 13 இடங்களை விட்டுக் கொடுத்ததற்கு எதிர்ப்பு காங்கிரஸ் அலுவலகத்தில், மேலிட பொறுப்பாளர்களை அக்கட்சி நிர்வாகிகள் முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.