உலக செய்திகள்

அதிபராக பதவியேற்ற பின்னர் ஜோ பைடன் நடத்தும் முதல் செய்தியாளர் சந்திப்பு + "||" + Joe Biden's first press conference since taking office

அதிபராக பதவியேற்ற பின்னர் ஜோ பைடன் நடத்தும் முதல் செய்தியாளர் சந்திப்பு

அதிபராக பதவியேற்ற பின்னர் ஜோ பைடன் நடத்தும் முதல் செய்தியாளர் சந்திப்பு
அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின்னர் வரும் மார்ச் 25 ஆம் தேதி ஜோ பைடன் முதல் செய்தியாளர் சந்திப்பை நடத்த உள்ளார்.
வாஷிங்டன்,

அமெரிக்காவின் 46வது அதிபராக ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன், கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார். கொரோனா தொற்று காலத்திற்கு இடையில் கடந்த நவம்பார் மாதம் அமெரிக்க அதிபருக்கான தேர்தல் நடந்து முடிந்தது. அதிபராக பதவியேற்ற பிறகு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அதிபர் ஜோ பைடன் தீவிரப்படுத்தியுள்ளார்.

இருப்பினும் அமெரிக்க அதிபராக ஜோ பைடன் அதிகாரப்பூர்வ செய்தியாளர் சந்திப்பை இதுவரை நடத்தவில்லை. டிரம்ப் உள்பட இதற்கு முன் அமெரிக்க அதிபராக பதவியேற்றவர்கள் அதிகபட்சம் ஒரு மாதத்திற்குள்ளாக செய்தியாளர்களை சந்திப்பை நடத்தியுள்ளனர். 

ஆனால், ஜோ பைடன் அதிபராக பொறுப்பேற்று 3 மாதங்களாகும் நிலையில், அவர் செய்தியாளர்களை சந்திக்காமல் இருக்கிறார். இந்நிலையில் வரும் 25ம் தேதி அவர் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக வெள்ளை மாளிகையின் செய்தி செயலாளர் ஜென் சகி தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பின்போது செய்தியாளர்கள் 40 கேள்விகள் வரை ஜோ பைடனிடம் கேட்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ‘பேஸ்புக்'கில் பரவும் கொரோனா குறித்த தவறான தகவல்கள் மக்களை கொல்கிறது: ஜோ பைடன்
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது.‌ எனினும் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து அங்கு கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு வெகுவாக குறைந்துள்ளது.
2. அமெரிக்காவில் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை விரைவில் 16 கோடியை எட்டும் - அதிபர் ஜோ பைடன்
அமெரிக்காவில் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை இந்த வார இறுதிக்குள் 16 கோடியை எட்டும் என அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
3. அமெரிக்க ஜனாதிபதியான பின் முதல் வெளிநாட்டு பயணம்; ஜோ பைடன், ரஷியாவுக்கு கடும் எச்சரிக்கை
அமெரிக்க ஜனாதிபதியான பின்னர் முதன்முதலாக ஜோ பைடன் இங்கிலாந்து சென்றார். ரஷியா தீங்கு விளைவிக்கும் செயலில் ஈடுபட்டால் வலுவான பதிலடி கொடுப்போம் என்று அவர் கடுமையாக எச்சரித்தார்.
4. டிக் டாக் செயலி: டிரம்பின் உத்தரவை ரத்து செய்தார் ஜோ பைடன்
சீன செயலிகளான டிக் டாக் மற்றும் வீ சாட்டிற்கு முன்னாள் அதிபர் டிரம்ப் தடை விதிக்க நடவடைக்கைகளை மேற்கொண்டார்.
5. விமானம் இடைமறிக்கப்பட்ட விவகாரம்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடும் கண்டனம்
விமானம் இடைமறிக்கப்பட்ட விவகாரத்தில் பெலாரஸ் நாட்டிற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.