உலக செய்திகள்

மெக்சிகோ, கனடாவிற்கு 40 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வழங்க அமெரிக்கா முடிவு + "||" + United States has decided to share 40 million corona vaccines to Mexico and Canada

மெக்சிகோ, கனடாவிற்கு 40 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வழங்க அமெரிக்கா முடிவு

மெக்சிகோ, கனடாவிற்கு 40 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வழங்க அமெரிக்கா முடிவு
மெக்சிகோ, கனடாவிற்கு 40 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வழங்க அமெரிக்க அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாஷிங்டன்,

உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அங்கு தற்போது மாடர்னா மற்றும் பைசர்/பையோஎன்டெக் ஆகிய நிறுவனங்கள் தயாரித்த கொரோனா தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அமெரிக்காவில் இதுவரை மொத்தம் 115,730,008 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இதற்கிடையில் அமெரிக்காவில் அஸ்ட்ரா ஜெனகா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிகள் பெருமளவில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. ஏப்ரல் மாத இறுதியில் சுமார் 3 கோடி அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசிகள் தயாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் அமெரிக்காவில் தற்போது அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு பயன்படுத்தப்படவில்லை.

இதனால் அமெரிக்காவில் மிகையாக தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசிகளை பிற நாடுகளுக்கு பகிர்ந்து கொடுக்க சர்வதேச அளவில் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இதையடுத்து மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளுக்கு 40 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வழங்க அமெரிக்க அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி மெக்சிகோ நாட்டிற்கு 25 லட்சம் தடுப்பூசிகளும், கனடாவிற்கு 15 லட்சம் தடுப்பூசிகளும் வழங்கப்பட உள்ளதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. இந்த தடுப்பூசிகளுக்கு ஈடு செய்யும் வகையில் மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய இரு நாடுகளும் அமெரிக்காவிற்கு சில மாதங்களுக்குப் பிறகு தடுப்பூசிகள் வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: இந்திய விமானங்களுக்கு 30 நாட்கள் தடை விதித்தது கனடா
கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து வரும் பயணிகள் விமானங்களுக்கு கனடா அரசு 30 நாட்கள் தடை விதித்துள்ளது.
2. கொரோனா அச்சத்தால் அமெரிக்க, கனடா ஓபன் பேட்மிண்டன் போட்டி ரத்து
அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் போட்டி ஜூலை 6-ந் தேதி முதல் 11-ந் தேதி வரையும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
3. மெக்சிகோவில் பெட்ரோல் டேங்கர் லாரி மீது பஸ் மோதி விபத்து; 11 பேர் உடல் கருகி பலி
மெக்சிகோ நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள நியூவோ லியோன் மாகாணத்தின் தலைநகர் மான்டேரியில் இருந்து பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. இந்த பஸ்சில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர்.
4. இந்தியாவில் இருந்து கூடுதல் தடுப்பூசி; சீரம் நிறுவனத்துடன் கனடா பேச்சு
இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனமும் கூட்டாக உருவாக்கிய கொரோனா தடுப்பூசியை அமெரிக்காவிடம் இருந்து 2 கோடி டோஸ் வாங்குவதற்கு கனடா ஏற்கனவே ஆர்டர் கொடுத்துள்ளது.
5. மெக்சிகோ விமானப்படை விமானம் விபத்துக்குள்ளானதில் 6 பேர் பலி
மெக்சிகோவின் வெராக்ரூசில் விமானப்படை விமானம் விபத்துக்குள்ளானதில் 6 பேர் சம்பவ இடத்திலே பலியாகினர்.