தேசிய செய்திகள்

பஞ்சாபில் மார்ச் 31 வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - முதல்வர் அமரிந்தர் சிங் அறிவிப்பு + "||" + Closure of schools and colleges in Punjab till March 31 - Chief Minister Amarinder Singh's announcement

பஞ்சாபில் மார்ச் 31 வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - முதல்வர் அமரிந்தர் சிங் அறிவிப்பு

பஞ்சாபில் மார்ச் 31 வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - முதல்வர் அமரிந்தர் சிங் அறிவிப்பு
கொரோனா பரவல் காரணமாக பஞ்சாபில் வரும் மார்ச் 31-ந் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார்.
சண்டிகர்,

பஞ்சாப் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்றைய தினம் மாநிலம் முழுவதும் புதிதாக 2,490 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த 24 மனி நேரத்தில் 38 பேர் கொரோனா பாதிப்பால் அங்கு உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த மாநில அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஃபெரோஸ்பூர் பகுதியில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சில இடங்களில் அபராதம் வசூலிக்கப்பட்டது.

இந்த நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக பஞ்சாப் மாநிலத்தில் வரும் மார்ச் 31-ந் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார். முதல்வரின் உத்தரவுப்படி, மார்ச் 31 வரை பள்ளி, கல்லூரிகள் மூடப்படும் என்றும் அதுவரை நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுவதாகவும் பஞ்சாப் மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் விஜய் இந்தர் சிங்லா தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. பஞ்சாப் மாநிலம் வருபவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என அறிவிப்பு
பஞ்சாப் மாநிலம் வருபவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
2. பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 4,673 பேருக்கு கொரோனா
பஞ்சாப் மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,09,316 ஆக உயர்ந்துள்ளது.
3. பஞ்சாப் மாநிலத்தில் புதிதாக 3,116 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 59 பேர் பலி
பஞ்சாப் மாநிலத்தில் நேற்று புதிதாக 3,116 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
4. பெயர் மாற்றம் பஞ்சாப் அணிக்கு பேரின்பம் அளிக்குமா?
14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 9-ந்தேதி தொடங்கி மே 30-ந்தேதி வரை சென்னை, மும்பை, ஆமதாபாத், கொல்கத்தா, டெல்லி, பெங்களூரு ஆகிய 6 நகரங்களில் நடைபெறுகிறது.
5. பஞ்சாபில் புதிதாக 2,820- பேருக்கு கொரோனா
பஞ்சாப்பில் கடந்த 24 மணி நேரத்தில் 2,820- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.