தேசிய செய்திகள்

சட்டசபைக்கு முக கவசம் அணியாமல் வந்த இமாசல பிரதேச முதல்-மந்திரி: காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்பு + "||" + Cong legislator calls out HP CM for flouting mask norms in House

சட்டசபைக்கு முக கவசம் அணியாமல் வந்த இமாசல பிரதேச முதல்-மந்திரி: காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்பு

சட்டசபைக்கு முக கவசம் அணியாமல் வந்த இமாசல பிரதேச முதல்-மந்திரி: காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்பு
இமாசல பிரதேச முதல்-மந்திரி சட்டசபைக்கு முக கவசம் அணியாமல் வந்ததால், காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சிம்லா, 

இமாசல பிரதேசத்தில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் பா.ஜனதா முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்குர் நேற்று முக கவசம் அணியாமல் சட்டசபை கூட்டத்துக்கு வந்தார். மேலும் சில உறுப்பினர்களும் முக கவசம் இன்றி கூட்டத்தில் பங்கேற்றனர்.

இதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த கட்சியை சேர்ந்த ஹர்சவர்தன் சவுகான் எம்.எல்.ஏ. பேசும்போது, இதை சுட்டிக்காட்டியதுடன், கொரோனாவுக்கு எதிராக மாநில அரசு வகுத்துள்ள விதிமுறைகளின்படி, முக கவசம் அணியாத முதல்-மந்திரிக்கு ஏன் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கக்கூடாது? என கேள்வி எழுப்பினார். 

கொரோனா விதிமுறைகளை அரசே தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை என குற்றம் சாட்டிய சவுகான், இந்த சூழலில் மக்களுக்கு இவ்வளவு அதிக அபராதம் போடுவதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதே கருத்தை எதிர்க்கட்சி தலைவரான முகேஷ் அக்னிகோத்ரியும் சுட்டிக்காட்டினார். பின்னர் பேசிய முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்குர், கொரோனா அதிகரிப்பால்தான் முக கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது எனவும், தவறும் மக்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தை குறைக்க போலீசாரிடம் கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. 16-வது சட்டசபையின் முதல் கூட்டம்: புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்றனர் 2 அமைச்சர்கள் உள்பட 10 பேர் பொறுப்பேற்கவில்லை
16-வது சட்டசபையின் முதல் கூட்டத்தில், தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி முன்னிலையில் புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். 2 அமைச்சர்கள் உள்பட 10 பேர் பொறுப்பேற்கவில்லை.
2. சபாநாயகராக அப்பாவு, துணை சபாநாயகராக பிச்சாண்டி போட்டியின்றி தேர்வாகிறார்கள் சட்டசபையில் நாளை பொறுப்பேற்பு
சபாநாயகராக மு.அப்பாவு, துணை சபாநாயகராக கு.பிச்சாண்டி ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று தி.மு.க. தலைமை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அவர்கள் இருவரும் போட்டியின்றி தேர்வாகிறார்கள். சட்டசபையில் நாளை (புதன்கிழமை) பொறுப்பேற்றுக்கொள்கிறார்கள்.
3. கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க இரண்டு முகக் கவசங்கள் அணிவது பலனளிக்குமா...?
கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் பாதுகாப்பதற்கு, இரண்டு முகக் கவசங்கள் அணிவதும் நல்ல பலனளிக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
4. முக கவசம் அணியாத வாடிக்கையாளர்களுக்கு வங்கிகளில் அனுமதி இல்லை; மாநில வங்கியாளர்கள் குழுமம் அறிவிப்பு
முககவசம் அணியாமல் வரும் வாடிக்கையாளர்கள் வங்கிகளில் அனுமதிக்கப்பட மாட்டார்கள், தமிழக அரசின் உத்தரவின்படி இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது என மாநில வங்கியாளர்கள் குழுமம் அறிவித்துள்ளது.
5. பரிசீலனையில் 2,716 மனுக்கள் நிராகரிப்பு: வேட்பாளர் இறுதி பட்டியல் இன்று வெளியாகிறது
வேட்புமனுகள் பரிசீலனையில் 2,716 மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், வேட்பாளர் இறுதி பட்டியல் இன்று (திங்கட்கிழமை) மாலை வெளியாகிறது.