தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு 30 சதவீத சம்பள உயர்வு: தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் அறிவிப்பு + "||" + KCR announces 30% pay hike for Telangana govt employees

அரசு ஊழியர்களுக்கு 30 சதவீத சம்பள உயர்வு: தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் அறிவிப்பு

அரசு ஊழியர்களுக்கு 30 சதவீத சம்பள உயர்வு: தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் அறிவிப்பு
தெலுங்கானா அரசு ஊழியர்களுக்கு 30 சதவீத சம்பள உயர்வு வழங்கப்படும் என்று அம்மாநில முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.
ஐதராபாத், 

தெலுங்கானா மாநில அரசு தனது அரசு ஊழியர்களுக்கு 30 சதவீத சம்பள உயர்வு அறிவித்துள்ளது. இதனை மாநில சட்டசபையில் முதல்-மந்திரி கே.சந்திரசேகர ராவ் நேற்று அறிவித்தார்.

மேலும் இதுதொடர்பாக பேசிய அவர், “சம்பள உயர்வால், ஒப்பந்த, வெளிப்பணி ஊழியர்கள் உள்ளிட்ட 9.17 லட்சம் அரசு ஊழியர்கள் பயன் பெறுவர். அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது 58-ல் இருந்து 61 ஆக அதிகரிக்கப்படுகிறது. ஓய்வுபெறும் ஊழியர்களுக்கான பணிக்கொடை தொகை ரூ.12 லட்சத்தில் இருந்து ரூ.16 லட்சமாக உயர்த்தப்படுகிறது” என்று சந்திரசேகர ராவ் கூறினார். 

மேலும் தகுதியுள்ள 80 சதவீத ஊழியர்களுக்கு ஏற்கனவே பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள ஊழியர்களுக்கும் விரைவில் பதவி உயர்வு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். நாகர்ஜுனசாகர் சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மாதிரி நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், ஊதிய திருத்தியமைப்புக்கு நிபந்தனையுடன் தேர்தல் ஆணையம் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதாவது, அரசியல் பலன் பெறும் வகையில், ஊதிய உயர்வு குறித்து தேவையற்ற விளம்பரம் செய்யக்கூடாது என்று தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்திருந்தது.

தொடர்புடைய செய்திகள்

1. அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல்லில் அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2. அரசு ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி இருப்பை அறிந்துகொள்ள புதிய முறை
அரசு ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி இருப்பை அறிந்துகொள்ள புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
3. பயங்கரவாதிகளுடன் தொடர்பு: ஜம்மு காஷ்மீரில் அரசு ஊழியர்கள் 11 பேர் பணி நீக்கம்
பல்வேறு துறைகளில் பணியாற்றிய 11 பேருக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருந்தது கண்டறியப்பட்டதையடுத்து பணி நீக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
4. அரசு ஊழியர்கள் விரைவாக தடுப்பூசி போட்டுக்கொள்ள மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் அறிவுறுத்தல்
18 வயதுக்கு மேற்பட்ட அரசு ஊழியர்கள் அனைவரும் விரைவாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் அறிவுறுத்தியுள்ளார்.
5. ஜூன் 30-ந் தேதி வரை அரசு ஊழியர்கள், அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தடை அரசு உத்தரவு
ஜூன் 30-ந் தேதி வரை அரசு ஊழியர்கள், அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்ய தடை விதித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.