தேசிய செய்திகள்

‘ஆண்களைவிட பெண்கள் வலிமையானவர்கள்' - ராகுல் காந்தி + "||" + "Women More Powerful Than Men": Rahul Gandhi Teaches Aikido In Kerala

‘ஆண்களைவிட பெண்கள் வலிமையானவர்கள்' - ராகுல் காந்தி

‘ஆண்களைவிட பெண்கள் வலிமையானவர்கள்' - ராகுல் காந்தி
ஆண்களைவிட வலிமையானவர்களான பெண்கள், அதை புரிந்துகொள்ளாததால் ஆண்களால் ஏமாற்றப்படுகின்றனர் என்று ராகுல் காந்தி கூறினார்.
கொச்சி, 

காங்கிரஸ் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி, கேரளாவில் 2 நாள் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். அதன் ஒரு பகுதியாக, கொச்சி செயின்ட் தெரசா மகளிர் கல்லூரி மாணவிகளுடன் நேற்று அவர் உரையாடினார்.

அப்போது பேசிய அவர், “ஆண்கள் உங்களுக்கு எப்போதும் சொல்லாத ஒரு ரகசியத்தை நான் உங்களுக்கு சொல்கிறேன். ஆண்களைவிட பெண்கள்தான் மிகவும் வலிமையானவர்கள். ஆனால் அதை பெண்கள் உணராததால் ஆண்கள் அவர்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

சமூகம், பெண்களாகிய உங்களைப் பிடித்து தள்ளும், தாக்கும். தினந்தோறும் உங்களை அவமரியாதைப்படுத்தும், நீங்கள் விரும்பியதை செய்ய விடாது. எனவே நீங்கள் உங்களுக்குள் இருந்து வலிமையை திரட்டிக்கொள்ள வேண்டும். நாம் எவ்வாறு தள்ளப்படுகிறோம், எந்த சக்திகள் தங்களைப் பாதிக்கின்றன என்று புரிந்து, பெண்கள் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும். நீங்கள் குறைந்த சக்தி கொண்டவர்கள் என்று உங்களை சமூகம் நம்பவைக்க முயலும். அதை ஏற்காதீர்கள். பெண்கள் தங்கள் சக்தியை உணரும் அதேநேரம், அதை தவறாக பயன்படுத்தவும் கூடாது” என்று ராகுல் காந்தி கூறினார்.

மேலும் அவர், மாணவிகளுக்கு ஜப்பானிய தற்காப்பு கலையான அக்கிடோ உத்திகளை கற்றுக்கொடுத்தார். அதில் ஒரு பெண் ஏழு மற்றவர்களால் தள்ளப்படுவதை எவ்வாறு எதிர்க்க முடியும் என்பதை ராகுல் காந்தி நிரூபித்துக் காட்டினார். அவர் அந்த இளம் பெண்ணின் தோரணையை சரியாகப் பெற உதவியதுடன், அக்கிடோ கொள்கையின் நுட்பத்தையும் அவருக்குக் காட்டினார்.

தொடர்புடைய செய்திகள்

1. மோட்டார் சைக்கிள் மூலம் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல நடிகர் அஜித் திட்டம்...?
நடிகர் அஜித் சில மாதங்களுக்கு முன், சிக்கிம் வரை, சுமார் பத்தாயிரம் கிலோ மீட்டர் அஜித் பைக்கில் சென்றுவந்தார்.
2. அஜித்தின் வலிமை தீபாவளிக்கு ரிலீஸ்?
அஜித்குமார் நடிக்கும் வலிமை படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தில் உள்ளது.
3. முதல் முறையாக மெக்காவில் பாதுகாப்பு பணியில் பெண்கள்
மெக்காவில் முதல் முறையாக பாதுகாப்புப் பணியில் ராணுவத்தைச் சேர்ந்த பெண்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
4. அஜித்தின் வலிமை பட வியாபாரம் முடிந்தது
அஜித்குமார் நடித்துள்ள வலிமை படத்தின் முதல் தோற்றம் இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலையில் படத்தின் வியாபாரம் முடிந்து விட்டதாக சமூக வலைத்தளத்தில் தகவல் பரவி வருகிறது.
5. போராளி கடல் பாதுகாப்பில் அசத்தும் பெண்கள்
நமது பூமியில் கிட்டத்தட்ட 70 சதவிகிதத்திற்கு மேல் கடல் பகுதி சூழப்பட்டுள்ளது. இதனால் கடற்பகுதியை மாசு அடையாமல் பார்த்துக் கொள்வது நமது தலையாய கடமைகளில் ஒன்று.