தேசிய செய்திகள்

ஹோலி பண்டிகையையொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து + "||" + President Ramnath Govind congratulates Holi festival

ஹோலி பண்டிகையையொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து

ஹோலி பண்டிகையையொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு ஹோலி பண்டிகை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி, 

ஹோலி பண்டிகை உலகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தீமையை நன்மை வெற்றி கொண்டதன் நினைவாக கொண்டாடப்படும் இந்த பண்டிகையின்போது மக்கள் ஒருவர் மீதொருவர் வண்ணப்பொடிகளை தூவி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். இந்த ஆண்டுக்கான ஹோலி பண்டிகை இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. நேற்று ஹோலிகா தகான் கொண்டாட்டங்கள் நடந்தன.

இந்நிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு ஹோலி பண்டிகை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது, “சக குடிமக்கள் அனைவருக்கும் ஹோலி பண்டிகை வாழ்த்துக்கள். வண்ணங்களின் திருவிழா, ஹோலி, சமூக நல்லிணக்கத்தின் பண்டிகை, இது மக்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், நிறைவையும், நம்பிக்கையையும் தருகிறது. இந்த திருவிழா நமது கலாச்சார பன்முகத்தன்மைக்கு ஒருங்கிணைந்த தேசியவாதத்தின் உணர்வை மேலும் வலுப்படுத்தட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்

1. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை காஷ்மீர் செல்கிறார்
பாகிஸ்தான் நாட்டுடனான கார்கில் போரில் வீர மரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நாளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஜம்மு-காஷ்மீர் செல்ல உள்ளார்.
2. 3 நாள் பயணமாக 25-ந் தேதி காஷ்மீர் செல்கிறார் ஜனாதிபதி
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 3 நாள் பயணமாக வருகிற 25-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காஷ்மீருக்கு செல்கிறார்.
3. பிறந்த இடம், சொர்க்கத்தை விட உயர்ந்தது - சொந்த ஊரில் ஜனாதிபதி நெகிழ்ச்சி
பிறந்த இடம், சொர்க்கத்தை விட உயர்ந்தது என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது சொந்த ஊரில் நெகிழ்ச்சியுடன் கூறினார்.
4. அப்துல் கலாம் வழியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ரெயிலில் பயணம்
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை டெல்லியில் இருந்து கான்பூருக்கு ரெயிலில் செல்கிறார்.
5. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உடன் யோகி ஆதித்யநாத் சந்திப்பு
உத்தரப் பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்துப் பேசினார்.