தேசிய செய்திகள்

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகளுடன் நடந்த மோதல்: 5 பாதுகாப்புப்படை வீரர்கள் பலி + "||" + Chhattisgarh: Five jawans killed in encounter with Naxals

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகளுடன் நடந்த மோதல்: 5 பாதுகாப்புப்படை வீரர்கள் பலி

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகளுடன் நடந்த மோதல்: 5 பாதுகாப்புப்படை வீரர்கள் பலி
சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டை தாக்குதலில் 5 பாதுகாப்புப்படை வீரர்கள் பலியாகினர்.
பிஐப்பூர், 

சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் நக்சலைட்டுகளுடன் நடந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 5 பாதுகாப்புப்படை வீரர்கள் பலியாகினர். மேலும் 10 பாதுகாப்பு படை வீரர்கள் காயமடைந்துள்ளதாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

இந்த சம்பவம் தொடர்பாக சத்தீஸ்கர் காவல் இயக்குநர் ஜெனரல் டி.எம் அவஸ்தி கூறுகையில், “நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டிருந்தபோது, ​​டாரெம் பகுதியில் (சுக்மா மற்றும் பிஜாப்பூர் எல்லையில்) துப்பாக்கிச் சண்டை வெடித்தது. சிஆர்பிஎப்பின் உயரடுக்கு கமாண்டோ பட்டாலியன் ஃபார் ரெசலூட் ஆக்சன் யூனிட் (கோப்ரா), மாவட்ட ரிசர்வ் காவலர் (டிஆர்ஜி) மற்றும் சிறப்பு பணிக்குழு (எஸ்.டி.எஃப்) ஆகியவற்றைச் சேர்ந்த பணியாளர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். முதற்கட்ட தகவல்களின்படி, துப்பாக்கிச் சண்டையில் ஐந்து ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் ஒரு 10 பேர் காயமடைந்துள்ளனர்” என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. சத்தீஸ்கர் மாநில ஐ.பி.எஸ். அதிகாரி மீது தேசத்துரோக வழக்கு
சத்தீஸ்கர் மாநில ஐ.பி.எஸ். அதிகாரி மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
2. சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் உடனான மோதலில் மாயமான 14 பாதுகாப்பு படை வீரர்கள் சடலமாக மீட்பு
சுக்மா பகுதியில் நேற்று நக்சலைட்டுகள் உடன் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஏற்கனவே 5 வீரர்கள் உயிரிழந்தனர்.
3. சத்தீஷ்கர்: மாவோயிஸ்டுகளுடன் என்கவுன்டரில் ஈடுபட்ட 15 வீரர்களை காணவில்லை எனத் தகவல்
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் மாவோயிஸ்டுகளுடன் என்கவுன்ட்டரில் ஈடுபட்ட 15 ராணுவ வீரர்களை காணவில்லை எனத் தகவல்கள் கூறுகின்றன.
4. சத்தீஸ்கர்: நக்சலைட்டுகள் கண்ணிவெடி தாக்குதலில் போலீசார் வந்த பஸ் வெடித்து சிதறியது 3 பேர் பலி
சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் கண்ணிவெடி தாக்குதலில் போலீசார் வந்த பஸ் வெடித்து சிதறியது இதில் 3 பேர் பலியானார்கள்