மாநில செய்திகள்

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் + "||" + Today's petrol and diesel price situation in Chennai

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் கடந்த 5 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி ஒரே விலையில் நீடிக்கிறது.
சென்னை,

பெட்ரோல், டீசல் விலை கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் 16-ந் தேதி முதல் தினசரி நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசல் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. அதற்கு முன்பு வரை பெட்ரோல், டீசல் விலை 15 நாட்களுக்கு ஒரு முறை விலை நிர்ணயம் செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 27-ந் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் 93 ரூபாய் 11 காசுக்கும், டீசல் 86 ரூபாய் 45 காசுக்கும் விற்பனை ஆனது. இது தான் அதிகபட்ச பெட்ரோல், டீசல் விலையாக பேசப்பட்டது. அதன்பின்னர், பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையில் நீடித்து வந்தது. தமிழகத்தில் தேர்தல் நேரமாக இருப்பதால் பெட்ரோல், டீசல் மாற்றம் இல்லாமல் இருந்து வருவதாக கூறப்பட்டது.

இதற்கிடையில் சில தினங்களுக்கு முன் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா 16 காசுகள் குறைந்திருந்தது. கிட்டத்தட்ட 4 மாதங்களுக்கு பிறகு, அதன் விலை குறைந்து காணப்பட்டது. அதனை தொடர்ந்து 4 நாட்களாக  மாறாமல் இருந்த் வந்த பெட்ரோல், டீசலின் விலை சில தினங்களுக்கு முன் சற்று குறைந்தது. 

இதையடுத்து சென்னையில் கடந்த 5 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி ஒரே விலையில் நீடிக்கிறது. அதன்படி சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.92.58-க்கும், டீசல் விலை ரூ.85.88-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வு
இன்றைய நிலவரப்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.93.84-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
2. சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
இன்றைய நிலவரப்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.93.84-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
3. தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு
ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.80 குறைந்து ரூ.36,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
4. சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வு
இன்றைய நிலவரப்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.93.84-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
5. சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வு
இன்றைய நிலவரப்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.93.62-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.