தேசிய செய்திகள்

இந்தியாவில் இதுவரை 7.59 கோடி ‘டோஸ்’ தடுப்பூசிகள் போடப்பட்டதாக தகவல் + "||" + It is reported that 7.59 crore dose vaccines have been administered in India so far

இந்தியாவில் இதுவரை 7.59 கோடி ‘டோஸ்’ தடுப்பூசிகள் போடப்பட்டதாக தகவல்

இந்தியாவில் இதுவரை 7.59 கோடி ‘டோஸ்’ தடுப்பூசிகள் போடப்பட்டதாக தகவல்
இந்தியாவில் இதுவரை 7.59 கோடி ‘டோஸ்’ தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி திட்டம் கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதி தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி 7 கோடியே 59 லட்சத்து 79 ஆயிரத்து 651 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதில் 43 சதவீத தடுப்பூசிகள் (3 கோடியே 33 லட்சத்து 10 ஆயிரத்து 437 தடுப்பூசிகள்) மராட்டியம், குஜராத், உத்தரபிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களில் மட்டுமே போடப்பட்டுள்ளன.

மராட்டிய மாநிலத்தில் இதுவரையில் 73 லட்சத்து 54 ஆயிரத்து 244 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இது மொத்த தடுப்பூசிகளில் 9.68 சதவீதம் ஆகும். அதற்கு அடுத்தபடியாக குஜராத்தில் 69 லட்சத்து 23 ஆயிரத்து 8 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

உத்தரபிரதேசத்தில் 66 லட்சத்து 43 ஆயிரத்து 96 தடுப்பூசிகளும், ராஜஸ்தானில் 64 லட்சத்து 31 ஆயிரத்து 601 தடுப்பூசிகளும், மேற்கு வங்காளத்தில் 59 லட்சத்து 58 ஆயிரத்து 488 தடுப்பூசிகளும் போடப்பட்டிருக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் 2- வது நாளாக தினசரி கொரோனா பாதிப்பு 4 லட்சத்திற்கு கீழ் குறைந்தது
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 29ஆயிரத்து 942 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. இந்தியாவின் கொரோனா நெருக்கடிக்கு தடுப்பூசி மட்டுமே நீண்ட கால தீர்வு: அமெரிக்கா சுகாதார நிபுணர்
இந்தியாவின் கொரோனா நெருக்கடிக்கு தடுப்பூசி மட்டுமே நீண்ட கால தீர்வு என்று அமெரிக்காவின் உயர் சுகாதார நிபுணர் தெரிவித்துள்ளார்.
3. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 4 லட்சத்திற்கு கீழ் குறைந்தது
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 66 ஆயிரத்து 161 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. இந்தியாவிற்கு 200 ஆக்சிஜன் சிலிண்டர்களை அனுப்பி வைத்தது தென் கொரியா
தென் கொரியாவில் இருந்து விமானம் மூலமாக 200 ஆக்சிஜன் சிலிண்டர்கள் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
5. இந்தியாவில் நேற்று வரை 17 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல்
இந்தியாவில் நேற்று வரை கொரோனா தடுப்பூசியின் 17 கோடி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.