மாநில செய்திகள்

சென்னை ஆழ்வார்பேட்டை வாக்குச்சாவடியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாக்களித்தார் + "||" + Makkal Needhi Maiyam leader Kamal Haasan, cast his vote at the Alwarpet polling station in Chennai

சென்னை ஆழ்வார்பேட்டை வாக்குச்சாவடியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாக்களித்தார்

சென்னை ஆழ்வார்பேட்டை வாக்குச்சாவடியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாக்களித்தார்
சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது வாக்கை செலுத்தினார்.
சென்னை,

தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையடுத்து தமிழகம் முழுவதும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும், விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

மக்கள் நீண்ட வரிசைகளில் நின்று ஆர்வத்துடன் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். அவர்களுடன் இணைந்து அரசியல் தலைவர்களும், திரைப்பிரபலங்களும் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். 

அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், இன்று காலையிலேயே சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு வருகை தந்தார். அவருடன் அவரது மகள்கள் ஸ்ருதிஹாசன் மற்றும் அக்‌ஷராஹாசனும் உடன் வந்து, வரிசையில் நின்று வாக்குகளை செலுத்தினர்.

தொடர்புடைய செய்திகள்

1. தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தோல்வி: தொண்டர்களின் கருத்தை கேட்கும் கமல்ஹாசன் ‘மனதில் உள்ளதை அனுப்புங்கள்’ என அறிக்கை
தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தோல்வியை தழுவியது. இதனைத்தொடர்ந்து கட்சி தொண்டர்களிடம் கமல்ஹாசன் கருத்துகளை கேட்க இருக்கிறார். ‘மனதில் உள்ளதை எனக்கு மின்னஞ்சலில் அனுப்புங்கள்’ என கட்சியினருக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2. சட்டசபை தேர்தலில் தோல்விக்கான காரணம் என்ன? நிர்வாகிகளுடன், கமல்ஹாசன் ஆலோசனை
சட்டசபை தேர்தலில் தோல்விக்கான காரணம் என்ன? என்பது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார்.
3. கடும் போட்டிக்கு இடையே கமல்ஹாசன் தோல்வி மக்கள் நீதி மய்யம் கூட்டணி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை
சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்கள் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. கமல்ஹாசன் மட்டும் கடுமையான போட்டிக்கு இடையே தோல்வியை தழுவினார்.
4. தேர்தல் முடிவு என்னவாக இருந்தாலும் மக்கள் நல விஷயத்தில் தீவிரமாக செயல்படுவோம் கமல்ஹாசன் பேச்சு
தேர்தல் முடிவு என்னவாக இருந்தாலும் மக்கள் நலம் எனும் விஷயத்தில் மக்கள் நீதி மய்யம் தீவிரமாக செயல்படும் என்று கமல்ஹாசன் பேசினார்.
5. குளச்சல் மீனவர்களின் குடும்பத்துக்கு நிவாரணம் பெற்றுத்தர மத்திய அரசை வலியுறுத்தவேண்டும் முதல்-அமைச்சருக்கு, கமல்ஹாசன் கடிதம்
நடுக்கடலில் கப்பல் மோதி விசைப்படகு கவிழ்ந்த விபத்தில் பாதிக்கப்பட்டுள்ள குளச்சல் மீனவர்களின் குடும்பத்துக்கு உரிய நிவாரணத்தை பெற்றுத்தர மத்திய அரசை வலியுறுத்தவேண்டும் என்று முதல்-அமைச்சருக்கு கமல்ஹாசன் கடிதம் எழுதியுள்ளார்.