மாவட்ட செய்திகள்

புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி வாக்களித்தார் + "||" + Former Puducherry Chief Minister Narayanasamy voted

புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி வாக்களித்தார்

புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி வாக்களித்தார்
புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தனது வாக்கை பதிவு செய்தார்.
புதுச்சேரி, 

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் மற்றும் புதுச்சேரியில் இன்று சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதில் கேரளா, புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது.

புதுச்சேரியில் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளிலுக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கிய நிலையில், புதுச்சேரி எதிர்கட்சி தலைவரும், என்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமி திலாஸ்பேட்டை அரசு நடுநிலைப்பள்ளியில் தனது வாக்கினைப் பதிவு செய்தார். 

அதனை தொடர்ந்து புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தனது வாக்கை பதிவு செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மக்கள் மத்தியில் காங்கிரஸ் -திமுக கூட்டணிக்கு அமோக வரவேற்பு உள்ளது. புதுச்சேரி மக்கள் ஆதரவுடன் எங்கள் கூட்டணி அமோக வெற்றி பெறும்” என்ற கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. புதுச்சேரி அரசு இணையதள பக்கத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமி படம் பதிவேற்றம்
புதுச்சேரி அரசின் இணையதளத்தில் மாநில நிர்வாகியான கவர்னர், முதல்-அமைச்சர் மற்றும் துறைத்தலைவர்கள் படம் இடம் பெற்றிருக்கும்.
2. புதுச்சேரியில் கொரோனா 2-வது அலையில் இளைஞர்களே அதிகம் பாதிப்பு - கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வேதனை
புதுச்சேரியில் கொரோனா 2-வது அலையில் இளைஞர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
3. புதுச்சேரியில் புதிதாக 1,819 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 18 பேர் பலி
புதுச்சேரியில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக இன்று ஒரேநாளில் 1,819 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. புதுச்சேரியை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வேன்; என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி உறுதி
புதுவையை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வேன் என்று என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி கூறியுள்ளார்.
5. புதுச்சேரியில் ரங்கசாமிதான் முதலமைச்சர் ; போட்டியில்லை -பா.ஜ.க மேலிடப் பொறுப்பாளர்
புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர் ரங்கசாமிதான் முதலமைச்சர் பதவிக்கு பாஜக போட்டியில்லை என்றும் பாஜக மேலிடப் பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா தெரிவித்துள்ளார்.