தேசிய செய்திகள்

கேரளாவில் இடதுசாரி கூட்டணி வரலாற்று வெற்றி பெறும்: பினராயி விஜயன் நம்பிக்கை + "||" + Pinarayi leans on religious metaphor to claim LDF would coast to victory

கேரளாவில் இடதுசாரி கூட்டணி வரலாற்று வெற்றி பெறும்: பினராயி விஜயன் நம்பிக்கை

கேரளாவில் இடதுசாரி கூட்டணி வரலாற்று வெற்றி பெறும்:  பினராயி விஜயன் நம்பிக்கை
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயகக் கூட்டணி வரலாற்று வெற்றி பெறும் என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.
கேரளாவில் 140 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக இன்று நடைபெற்று வருகிறது. முதல் மந்திரி  பினராயி விஜயன் தர்மடம் தொகுதியில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் சி.ரகுநாத் போட்டியிடுகிறார்.

 பினராயி விஜயன் தனது தர்மடம் தொகுதியில் இன்று வாக்களித்தார். அதன்பின் பினராயி விஜயன் நிருபர்களுக்கு  பேட்டி அளிக்கையில் கூறியதாவது: ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான எல்டிஎஃப் கூட்டணி வரலாற்று வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என நம்புகிறேன். 

இடதுசாரிகளுடன் துணையாக இருக்கும் மக்கள் மீது தீவிரமான நம்பிக்கை இருக்கிறது. பாஜக, நீமம் தொகுதியில் மட்டும் கடந்த தேர்தலில் வென்றது. ஆனால், இந்த முறை பாஜகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவிடமாட்டோம். கடந்த தேர்தலைவிட இந்த முறை நாங்கள் வரலாற்று வெற்றி பெறுவோம். ஐயப்ப பக்தர்களும், அனைத்துக் கடவுள்களும் இடதுசாரிகளுக்கு ஆதரவாக இருப்பார்கள்” என்றார். 


தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவில் முழு ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை - பினராயி விஜயன்
கேரளாவில் தற்போது உள்ள சூழ்நிலையில் முழு ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை என்று அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
2. தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையில் பினராயி விஜயனுக்கு கொரோனா
தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையில், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. தேர்தல் விதிகளுக்கு எதிராக அமலாக்கத்துறை செயல்படுகிறது: பினராயி விஜயன் குற்றச்சாட்டு
தேர்தல் விதிகளுக்கு எதிராக அமலாக்கத்துறை செயல்படுவதாக பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.
4. கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு கர்நாடகா கட்டுப்பாடு: பிரதமருக்கு பினராயி விஜயன் கடிதம்
கேரள மக்கள் கர்நாடகத்திற்குள் நுழைய அனுமதி மறுப்பது தொடர்பாக பிரதமருக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.
5. கேரள கிறிஸ்தவ திருச்சபையில் 2 குழுக்களின் மோதலை தீர்க்க மோடி நடவடிக்கை; பினராயி விஜயன் வரவேற்பு
டெல்லியில் பிரதமர் மோடி, ஆர்த்தோடக்ஸ் பிரிவினருடன் கடந்த திங்கட்கிழமையும், யாக்கோபிய பிரிவினருடன் நேற்றும் பேச்சுவார்த்தை நடத்தினார்.