தேசிய செய்திகள்

புதுச்சேரி சட்டசபை தேர்தல்: மாலை 6 மணி நிலவரப்படி 78.03% வாக்குப்பதிவு + "||" + Puducherry Assembly Election: Polling Percentage Report on Evening 6 O Clock

புதுச்சேரி சட்டசபை தேர்தல்: மாலை 6 மணி நிலவரப்படி 78.03% வாக்குப்பதிவு

புதுச்சேரி சட்டசபை தேர்தல்: மாலை 6 மணி நிலவரப்படி 78.03% வாக்குப்பதிவு
புதுச்சேரி சட்டசபை தேர்தலில் மாலை 6 மணி நிலவரப்படி 78.03% வாக்குப்பதிவாகியுள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரி,

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் மற்றும் புதுச்சேரியில் இன்று சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரி ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. இதற்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். 

30 தொகுதிகளை கொண்ட புதுச்சேரி சட்டசபை தேர்தலும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், புதுச்சேரி சட்டசபை தேர்தலில், மாலை 6 மணி நிலவரப்படி 78.03% வாக்குப்பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மாலை 6 மணிக்கு மேல் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

1. புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்: என்.ஆர் காங்கிரஸ் அதிக இடங்களில் முன்னிலை
புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
2. புதுச்சேரி சட்டசபை தேர்தல்: மாலை 5 மணி நிலவரப்படி 76.03% வாக்குப்பதிவு
புதுச்சேரி சட்டசபை தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 76.03% வாக்குப்பதிவாகியுள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
3. புதுச்சேரியில் பாமக போட்டியிடவில்லை... 10 தொகுதிகளில் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் திடீர் வாபஸ்
புதுச்சேரியில் போட்டியிட பாமக வேட்பாளர்கள் தாக்கல் செய்திருந்த வேட்புமனுக்களை இன்று திடீரென வாபஸ் பெற்றுள்ளனர்.
4. புதுச்சேரியில் காங்கிரஸ் அலுவலகத்தில், மேலிட பொறுப்பாளர்களை முற்றுகையிட்ட நிர்வாகிகள்
புதுச்சேரியில் திமுகவுக்கு 13 இடங்களை விட்டுக் கொடுத்ததற்கு எதிர்ப்பு காங்கிரஸ் அலுவலகத்தில், மேலிட பொறுப்பாளர்களை அக்கட்சி நிர்வாகிகள் முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
5. புதுச்சேரியில் பாஜக-அதிமுக தொகுதி பங்கீட்டில் இழுபறி
புதுச்சேரியில் பாஜக-அதிமுக தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வருகிறது. கேட்ட இடங்கள் கிடைக்காததால் அதிமுகவினர் அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.