தேசிய செய்திகள்

கேரளாவில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது - மாலை 7 மணி நிலவரப்படி 73.58% வாக்குப்பதிவு + "||" + Kerala Polls 73% votes cast till 7pm says Election Commission

கேரளாவில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது - மாலை 7 மணி நிலவரப்படி 73.58% வாக்குப்பதிவு

கேரளாவில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது - மாலை 7 மணி நிலவரப்படி 73.58% வாக்குப்பதிவு
கேரளாவில் மாலை 7 மணி நிலவரப்படி 73.58% வாக்குகள் பதிவாகியுள்ளது.
திருவனந்தபுரம்,

140 தொகுதிகளை கொண்ட கேரள சட்டசபைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றுள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. 

கேரளாவில் ஆளும் கட்சியான இடதுசாரிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் இடது ஜனநாயக முன்னணி கூட்டணி, காங்கிரசின் ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணி மற்றும் பாஜக கூட்டணிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. 

கேரளாவில் 1,32,83,724 ஆண் வாக்களர்கள், 1,41,62,025 பெண் வாக்காளர்கள், 290 திருநங்கைகள் உள்ளனர். இத்தேர்தலில் மொத்தம் 957 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர்.

இந்நிலையில், கேரளாவில் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. மாலை 7 மணி நிலவரப்படி 73.58% வாக்குகள் பதிவாகியுள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

1. இந்த மாபெரும் வெற்றியை கேரள மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன் - பினராயி விஜயன் பேச்சு
இந்த மாபெரும் வெற்றியை நான் கேரள மக்களுக்கு தாழ்மையுடன் சமர்ப்பிக்கிறேன் என்று முதல்மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
2. கேரளாவில் இடதுசாரி ஜனநாயக முன்னணி தொடர்ந்து முன்னிலை
கேரளாவில் 94 தொகுதிகளில் இடதுசாரி ஜனநாயக முன்னணி தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.
3. ஐயப்பன் உள்பட அனைத்து கடவுள்களும் எங்களுக்கு துணையாக உள்ளனர் - கேரள முதல்மந்திரி பினராயி விஜயன் பேச்சு
ஐயப்பன் உள்பட அனைத்து கடவுள்களும் தங்கள் அரசுக்கு துணையாக உள்ளது என்று கேரள முதல்மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
4. கேரளா சட்டப்பேரவை தேர்தல்: மாலை 5 மணி நிலவரப்படி 70.03 சதவீத வாக்குகள் பதிவு
கேரளா சட்டப்பேரவை தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 70.03 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது
5. கேரளா சட்டசபை தேர்தல்: மாலை நிலவரப்படி 58.66 சதவீத வாக்குகள் பதிவு
கேரளா சட்டசபை தேர்தலில் மாலை நிலவரப்படி 58.66 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது