தேசிய செய்திகள்

முக கவசம் சரியாக அணியவில்லை என கூறி அடித்து உதைத்த போலீசார்; வைரலான வீடியோ + "||" + Cops who beat him up for not wearing a face mask properly; Viral video

முக கவசம் சரியாக அணியவில்லை என கூறி அடித்து உதைத்த போலீசார்; வைரலான வீடியோ

முக கவசம் சரியாக அணியவில்லை என கூறி அடித்து உதைத்த போலீசார்; வைரலான வீடியோ
முக கவசம் சரியாக அணியவில்லை என கூறி நபர் ஒருவரை போலீசார் அடித்து உதைத்த வீடியோ வைரலானது.
போபால்,

மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரில் 2 போலீசார் சேர்ந்து ஒரு நபரை கடுமையாக அடித்து, உதைத்து தாக்கியுள்ளனர்.  இதுபற்றிய வீடியோ வெளிவந்து வைரலானது.

இதுபற்றி அந்த நபர் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, மருத்துவமனையில் உள்ள எனது தந்தைக்கு உணவு எடுத்து சென்றேன்.  வழியில் போலீசார் என்னிடம், முக கவசம் சரியாக அணியவில்லை என கூறி காவல் நிலையத்திற்கு வரும்படி என்னிடம் கூறினார்கள்.

இதுபற்றி பின்னர் தெரிவிக்கிறேன் என அவர்களிடம் வேண்டுகோளாக கேட்டேன்.  ஆனால் அவர்கள் என்னை அடிக்க தொடங்கி விட்டனர் என்று கூறியுள்ளார்.

இந்த சம்பவம் பற்றி இந்தூர் எஸ்.பி. அசுதோஷ் பாக்ரி கூறும்பொழுது, முக கவசம் அணியவில்லை என்பதற்காக அந்த நபரை காவல் நிலையத்திற்கு கொண்டு செல்ல 2 போலீசாரும் முயன்றுள்ளனர்.  ஆனால், அந்த நபர் போலீசாரை தாக்க முயற்சித்துள்ளார்.

போலீசாருக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் இந்த பகுதி வீடியோவில் இருந்து நீக்கப்பட்டு உள்ளது.  போலீசார் செய்ததும் தவறு.  அவர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர்.  இதுபற்றி விசாரணையும் நடந்து வருகிறது என்று கூறியுள்ளார்.