தேசிய செய்திகள்

அடுத்த 4 வாரங்கள் நெருக்கடியானவை- மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் + "||" + Next 4 weeks critical to battle 2nd Covid wave: NITI Aayog’s Paul

அடுத்த 4 வாரங்கள் நெருக்கடியானவை- மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்

அடுத்த 4 வாரங்கள் நெருக்கடியானவை- மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்
கொரோனா பரவலில் அடுத்த 4 வாரங்கள் மிகவும் நெருக்கடியானவை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த மாதம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் ஏறுமுகம் காணத்தொடங்கியது. அது இந்த மாதத்திலும் தொடர்ந்தது. இந்தியாவில் நேற்று முன் தினம் 1 லட்சத்தை தாண்டி கொரோனா பாதிப்பு பதிவாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில், கொரோனா பரவலில் அடுத்த 4 வாரங்கள் நெருக்கடியாக இருக்கும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன், நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) விகே பால் ஆகியோர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:- “ 

கொரோனாவின் 2-வது அலை முதல் அலையை விட வேகமாக பரவுகிறது. நாம் இதை சமாளிக்க வேண்டும். எதிர்கொள்வதோடு வீழ்த்தவும் வேண்டும். இரண்டாவது அலையை கட்டுப்படுத்துவதில் மக்களின் பங்களிப்பு அவசியம். அடுத்த  4 வாரங்கள் நெருக்கடியானதாக இருக்கும். ஒட்டுமொத்த நாடும் ஒன்றிணைந்து நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். கொரோனா பாதிப்பால் ஏற்படும் பலி எண்ணிக்கையை குறைப்பதுதான் தடுப்பூசியின் முக்கிய நோக்கம். 

மருத்துவ துறையில் பணியாற்றுவோரை காப்பாற்றுவதும் அந்த திட்டத்தின் மற்றொரு முக்கிய நோக்கமாகும். கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படும் நபர்களை பாதுகாப்பதே எந்த ஒரு நாட்டின் நோக்கமும் ஆக இருக்கிறது. யார் விரும்புகிறார்களோ அவர்களுக்கு தடுப்பூசி போடுவது இலக்கு அல்ல. யாருக்கு அதிக பாதிப்பு ஏற்படுமோ அவர்களுக்கு தடுப்பூசி போடுவதோ இலக்கு” என்றார். 


தொடர்புடைய செய்திகள்

1. சில மாநிலங்களில் கொரோனா தொற்று பாதிப்பு உயர்வு : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.