தேசிய செய்திகள்

கர்நாடகாவில் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்: பயணிகள் அவதி + "||" + Karnataka: Bus services affected in Bengaluru as Karnataka State Road Transport Corporation (KSRTC) employees go on an indefinite strike over their demand for revision of salary

கர்நாடகாவில் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்: பயணிகள் அவதி

கர்நாடகாவில் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்: பயணிகள் அவதி
கர்நாடகாவில் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெங்களூரு,

அரசு போக்குவரத்து ஊழியர்கள் தங்களுக்கு 6-வது ஊதிய குழு பரிந்துரையின்படி சம்பள உயர்வு வழங்க வேண்டும், தங்களை அரசு ஊழியர்களாக கருத வேண்டும் என்பன உள்பட 10 கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். போக்குவரத்து ஊழியர்கள் சங்க பிரதிநிதிகளுடன், அரசு பேச்சுவார்த்தை நடத்தியது.

இதில் அரசு ஊழியர்களாக கருத வேண்டும் என்ற கோரிக்கையை தவிர மற்ற 9 கோரிக்கைகளை 3 மாதத்திற்குள் நிறைவேற்றுவதாக அரசு எழுத்துப்பூர்வமான வாக்குறுதியை அளித்தது. இதையடுத்து போக்குவரத்து ஊழியர்கள் தங்களின் வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றனர். ஆனால் அரசு அளித்த வாக்குறுதியின்படி தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்று ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும் சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்பட தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வருகிற 7-ந் தேதி (அதாவது இன்று) முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று போக்குவரத்து ஊழியர்கள் அறிவித்தனர். இதன்படி இன்று கர்நாடகாவில் அரசு பேருந்துகள் இயங்கவில்லை. 

இதனால், பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். பேருந்து நிலையங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.   பேருந்துகள் இயங்காததால் வேலைக்கு செல்பவர்கள், மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் என பலரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, தனியார் பேருந்துகளை இயக்க கர்நாடக அரசு தற்காலிக அனுமதியை வழங்கியுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக பஸ்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. அதனால் போக்குவரத்து கழகங்கள், நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. இந்த சூழ்நிலையில் போக்குவரத்து ஊழியர்களின் சம்பள உயர்வு கோரிக்கையை அரசு நிறைவேற்றுவது கடினமான ஒன்றாகும் என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா எதிரொலி: பள்ளி, கல்லூரிகளை மூடப்போவதில்லை: கர்நாடக அரசு
கர்நாடகத்தில் அடுத்த 15 நாள்களுக்கு பள்ளி, கல்லூரிகளை மூடப்போவதில்லை என அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.
2. கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பு எதிரொலி; கர்நாடகத்தில் இரவு நேர ஊரடங்கு? கர்நாடக அரசுக்கு நிபுணர்குழு பரிந்துரை
கொரோனா பரவல் திடீரென அதிகரித்துள்ள நிலையில் கர்நாடகத்தில் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த பரிந்துரை செய்து நிபுணர்குழு அரசிடம் அறிக்கை தாக்கல் செய்து உள்ளது.
3. கர்நாடக அரசு சார்பில் நகைக்கடைகள் திறக்க முடிவு; கர்நாடக கனிமவளத்துறை மந்திரி முருகேஷ் நிரானி பேட்டி
கர்நாடக அரசு சார்பில் நகைக்கடைகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கனிமவளத்துறை மந்திரி முருகேஷ் நிரானி கூறினார்.
4. புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு கட்டுப்பாடு; பெங்களூருவில் 144 தடை உத்தரவு
இங்கிலாந்து நாட்டில் புதிதாக உருவாகி உள்ள கொரோனா காரணமாக உலகம் முழுவதும் அச்சம் எழுந்துள்ளது.
5. கர்நாடக அரசு போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் 4 நாட்களுக்கு பிறகு பஸ்கள் ஓடத்தொடங்கின
கர்நாடக அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் நேற்று வாபஸ் பெறப் பட்டது. அதனை தொடர்ந்து 4 நாட்களுக்கு பிறகு நேற்று மாலையில் இருந்து பஸ்கள் ஓடத்தொடங்கின.