தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசி யாருக்கு தேவையோ அவர்களுக்கு மட்டுமே போடப்படும் -சுகாதார அமைச்சகம் விளக்கம் + "||" + vaccine to those who want it but to those who need it- Union Health Secy Rajesh Bhushan

கொரோனா தடுப்பூசி யாருக்கு தேவையோ அவர்களுக்கு மட்டுமே போடப்படும் -சுகாதார அமைச்சகம் விளக்கம்

கொரோனா தடுப்பூசி யாருக்கு தேவையோ அவர்களுக்கு மட்டுமே போடப்படும் -சுகாதார அமைச்சகம் விளக்கம்
கொரோனா தடுப்பூசி யாருக்கு தேவையோ அவர்களுக்கு மட்டுமே போடப்படும் என்பதுடன் யார் யாருக்கு விருப்பம் இருக்கிறது என்பதற்காக போடப்பட மாட்டாது என சுகாதார அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
புதுடெல்லி

தற்போது, ​​45 வயதிற்கு மேற்பட்டவர்கள், மற்றும் சுகாதார மற்றும் முன்னணி ஊழியர்கள் மட்டுமே தடுப்பூசி பெற தகுதியுடையவர்களாக இருக்கிறார்கள். 18 வயது மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடவேண்டும் என இந்திய மருத்துவ கவுன்சில் பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்து கடிதம் எழுதி உள்ளது.

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் ஆனைவருக்கும் ஏன் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கவில்லை என அரசை நோக்கி பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதற்கு சுகாதார அமைச்சக செயலாளர் ராஜேஷ் பூஷண் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும் போது  கொரோனா மரணங்களை தடுக்க வேண்டும், சுகாதாரம் மற்றும் மருத்துவ பணியாளர்களை காப்பாற்ற வேண்டும் என்ற இரண்டு நோக்கங்களுக்காக மட்டுமே தற்போது தடுப்பூசி போடப்படுகிறது. மக்கள் விரும்புகிறார்கள் என்பதற்காக அனைவருக்கும் தடுப்பூசியை போட முடியாது. யாருக்கு தேவையோ அவர்களுக்கு மட்டுமே போடப்படும்  என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் கொரோனா பரவலைத் தடுக்க 12 ஆயிரம் தன்னார்வலர்கள் வீடுவீடாகச் சென்று ஆய்வு -மாநகராட்சி ஆணையர்
சென்னையில் கொரோனா பரவலைத் தடுக்க 12 ஆயிரம் தன்னார்வலர்கள் வீடுவீடாகச் சென்று ஆய்வு செய்ய உள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
2. தமிழகத்தில் தடுப்பூசி திருவிழா தொடங்கியது; பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம்
தமிழகத்தில் தடுப்பூசி திருவிழா தொடங்கியது,பொதுமக்கள் ஆர்வமாக பங்கேற்று தடுப்பூசி போட்டு வருகிறார்கள்.
3. மராட்டியத்தில் சோதனை செய்யப்பட்ட மாதிரிகளில் 61% அதி தீவிர கொரோனா- ஆய்வில் தகவல்
மராட்டியத்தில் சோதனை செய்யப்பட்ட மாதிரிகளில் 61 சதவீதம் அதி தீவிர கொரோனா இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
4. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஏறுமுகத்தில் உள்ளது- சுகாதாரத்துறை செயலாளர்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஏறுமுகத்தில் உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
5. சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவுக்கு கொரோனா தொற்று உறுதி
சமாஜ்வாடி கட்சியின் தலைவரும், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

அதிகம் வாசிக்கப்பட்டவை