மாநில செய்திகள்

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை + "||" + An interim injunction cannot be imposed on the trial

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது  - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
மதுரை,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும் சாத்தான்குளம் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு தாக்கப்பட்டனர். பின்னர் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் 2 பேரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இதுகுறித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவின்பேரில், விசாரணை நடத்திய சி.பி.சி.ஐ.டி. போலீசார், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 10 போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் கைதான போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பால்துரை கொரோனாவால் இறந்ததால், மற்ற 9 பேர் மீதான விசாரணை நடைபெற்று வருகிறது.  

இந்த நிலையில், இந்த வழக்கில சிபிஐ ஆவணங்களை தாக்கல் செய்யும்வரை விசாரணைக்கு தடைவிதிக்க வேண்டும் என காவலர்கள் தரப்பில் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, “வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்துவிட்டது. மேலும்,  இந்த வழக்கில்  சிபிஐ பதிலளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணையை 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணையை 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
2. சாத்தான்குளத்தில் சாலைமறியலில் ஈடுபட்ட 55 பா.ஜனதாவினர் கைது; கால்வாயில் தண்ணீர் திறப்பதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதாக புகார்
சாத்தான்குளத்தில், புத்தன் தருவைகுளத்துக்கு கால்வாயில் தண்ணீர் திறப்பதில் பாரபட்சமாக நடந்து கொண்ட அதிகாரிகளை கண்டித்து பா.ஜனதா கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜனதாவினர் 55 பேரை போலீசார் கைது செய்தனர்.
3. தந்தை-மகன் கொலையை உறுதிப்படுத்தியது எப்படி? சி.பி.ஐ. தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை விவரம் வெளியானது
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலையை உறுதிப்படுத்தியது எப்படி? என்பது தொடர்பாக மதுரை கோர்ட்டில் சி.பி.ஐ. தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை விவரம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.