தேசிய செய்திகள்

கொரோனா பரவல் அதிகரிப்பு: மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை + "||" + PM Modi to meet CMs on 8 Apr to discuss covid surge

கொரோனா பரவல் அதிகரிப்பு: மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை

கொரோனா பரவல் அதிகரிப்பு:  மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி  நாளை ஆலோசனை
பிரதமர் மோடி, கொரோனா நிலவரம் பற்றி அனைத்து மாநில, யூனியன் பிரதேசங்களின் முதல்-மந்திரிகளுடன் நாளை ஆலோசனை நடத்துகிறார்
புதுடெல்லி, 

இந்தியாவில் கடந்த ஒரு மாதமாக கொரோனா வைரஸ் முழு வேகத்துடன் தாக்கி வருகிறது. இது, இரண்டாவது அலையாக கருதப்படுகிறது. குறிப்பாக மராட்டியம், பஞ்சாப், கர்நாடகா, கேரளா, சத்தீஷ்கார், சண்டிகார், குஜராத், மத்தியபிரதேசம், தமிழ்நாடு, டெல்லி, அரியானா ஆகிய 11 மாநிலங்களில் தொடா்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. 

இந்த மாநிலங்களை, ‘பெரும் கவலைக்குரிய மாநிலங்கள்’ என்று மத்திய அரசு வகைப்படுத்தி உள்ளது. குறிப்பாக இன்று  கொரோனா பாதிப்பு 1 லட்சத்து 15 ஆயிரமாக உள்ளது. நாட்டில் கொரோனா பரவிய காலம் முதல் ஏற்பட்ட ஒருநாள் அதிகபட்ச பாதிப்பு இதுதான் ஆகும்.  தினசரி பாதிப்பில் அமெரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளையும் மிஞ்சி இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது.

மாநிலங்களில் தொற்று அதிகரித்து வரும்நிலையில், கடந்த வாரம் மத்திய அரசு உயர்மட்ட ஆலோசனை கூட்டங்களை நடத்தியது. கடந்த 2-ந் தேதி, அனைத்து மாநிலங்களின் தலைமை செயலாளர்கள், சுகாதார செயலாளர்கள் ஆகியோருடன் மந்திரிசபை செயலாளர் ராஜீவ் கவுபா ஆலோசனை நடத்தினார்.

இதன் தொடர்ச்சியாக, பிரதமர் மோடி, கொரோனா நிலவரம் பற்றி அனைத்து மாநில, யூனியன் பிரதேசங்களின் முதல்-மந்திரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். வருகிற 8-ந் தேதி (வியாழக்கிழமை) மாலை 6.30 மணிக்கு இந்த ஆலோசனை நடக்கிறது. அப்போது, கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படுகிறது. புதிதாக கட்டுப்பாடுகள் விதிப்பது பற்றியும் பேசப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. நன்றி பாராட்டும் நடைமன்னன்
உலகையே முடக்கிப் போட்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்று தனது பரவலை தொடங்கி, ஓர் ஆண்டை நிறைவு செய்துவிட்டது. அதன் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை. இரண்டாவது அலையும் வீச தொடங்கி இருப்பதால் பலரும் பீதியில் இருக்கிறார்கள்.
2. நாடு முழுவதும் போதுமான அளவு தடுப்பூசி கிடைப்பதில் அரசு உறுதி - கவர்னர்களுடனான சந்திப்பில் பிரதமர் மோடி தகவல்
நாடு முழுவதும் போதுமான அளவு தடுப்பூசி கிடைக்க அரசு உறுதிபூண்டுள்ளதாக கவர்னர்களுடனான சந்திப்பின்போது பிரதமர் மோடி கூறினார்.
3. அனைத்து மாநில ஆளுநர்களுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக ஆலோசனை
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி குறித்து மாநில ஆளுநர்களுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
4. திறன்மிக்க இளைஞர்களின் பங்கு அதிகரிப்பு - பிரதமர் மோடி
இந்தியா தற்சார்பு பாதையில் பயணிப்பதில் திறன்மிக்க இளைஞர்களின் பங்கு அதிகரித்து வருகிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
5. நவராத்திரி, யுகாதி பண்டிகைகளை ஒட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
நவராத்திரி, யுகாதி உள்ளிட்ட பண்டிகைகளை ஒட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.