தேசிய செய்திகள்

மராட்டியத்தில் கொரோனா அதிகரிக்க வெளிமாநில தொழிலாளர்களே காரணம்; ராஜ்தாக்கரே சொல்கிறார் + "||" + Migrants Responsible For Covid Spread In Maharashtra: Raj Thackeray

மராட்டியத்தில் கொரோனா அதிகரிக்க வெளிமாநில தொழிலாளர்களே காரணம்; ராஜ்தாக்கரே சொல்கிறார்

மராட்டியத்தில் கொரோனா அதிகரிக்க வெளிமாநில தொழிலாளர்களே காரணம்; ராஜ்தாக்கரே சொல்கிறார்
மராட்டியத்தில் கொரோனா அதிகரிக்க வெளிமாநில தொழிலாளர்களே காரணம் என ராஜ்தாக்கரே தெரிவித்துள்ளார்.
மும்பை,

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. குறிப்பாக மராட்டிய மாநிலத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கொரோனா பரவல் உச்சம் தொட்டுள்ளது. நேற்று 55 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

 இந்த நிலையில்,  மராட்டிய மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரிக்க புலம் பெயர் தொழிலாளர்களே காரணம் என நவநிர்மாண் சேனா கட்சியின் தலைவர் ராஜ்தாக்கரே விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

இந்தியாவிலேயே மராட்டிய மாநிலம் தான்  அதிக அளவில் தொழில்மயமான மாநிலம். இதனால்,  இங்கு  பணியாற்ற வெளிமாநிலங்களில் இருந்து அதிகளவில் தொழிலாளர்கள் இங்கு வருகின்றனர். வெளிமாநிலங்களில் இருந்து  மராட்டியத்துக்கு வரும் தொழிலாளர்களுக்கு அவர்களது சொந்த மாநிலங்களில் போதுமான அளவுக்கு  கொரோனா சோதனை வசதிகள் இல்லை. மராட்டியத்தில் கொரோனா   தொற்று அதிகரிக்க வெளிமாநிலங்களில் இருந்து இங்கு வந்த புலம்பெயர் தொழிலாளர்களே காரணம்” என்றார்.


தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவில் இன்று 7,515- பேருக்கு கொரோனா தொற்று
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,515- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. கொரோனா பரவல் மோசமாக உள்ளது; “வீட்டை விட்டு வெளியே செல்லாதீர்கள்”- கெஜ்ரிவால் அறிவுறுத்தல்
டெல்லியில் கொரோனா பரவல் மோசமாக உள்ளது என கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
3. உத்தர பிரதேசத்தில் ஒரே நாளில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா
உத்தர பிரதேசத்தில் ஒரே நாளில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. கர்நாடகாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியது
கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது.
5. ஆந்திராவில் மேலும் 2,765- பேருக்கு கொரோனா
ஆந்திராவில் மேலும் 2,765- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.