மாநில செய்திகள்

வளிமண்டல சுழற்சி 9 முதல் 11 ஆம் தேதி வரை தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் + "||" + Chance of rain in South Tamil Nadu - Chennai Meteorological Center

வளிமண்டல சுழற்சி 9 முதல் 11 ஆம் தேதி வரை தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்

வளிமண்டல சுழற்சி 9 முதல் 11 ஆம் தேதி வரை தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்
வளிமண்டல சுழற்சி காரணமாக வரும் 9 முதல் 11 ஆம் தேதி வரை, தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் அறிவித்து உள்ளது.
சென்னை

சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

குமரிக்கடல் பகுதியில் உருவாகவுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக வரும் 9 முதல் 11 ஆம் தேதி வரை, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும். இன்றும் நாளையும் தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட கால நிலை காணப்படும். நாமக்கல், கரூர் மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பை விட 3 முதல் 4 டிகிரி உயர்ந்து காணப்படும்.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.வெப்பநிலை அதிகபட்சம் 35 டிகிரி, குறைந்தது 26 டிகிரி செல்ஷியஸ்  ஆக இருக்கும் என கூறப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. 7-ம் தேதி வரை தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இயல்பை விட வெயில் அதிகம் இருக்கும் -சென்னை வானிலை மையம் எச்சரிக்கை
இன்று முதல் 7-ம் தேதி வரை தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இயல்பை விட வெயில் அதிகம் இருக்கும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது
2. அனல் காற்று வீசும், பகல் 12 மணி முதல் 4 மணி வரை வெளியில்செல்ல வேண்டாம்-சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
அனல் காற்று வீசக்கூடும். பகல் 12 மணி முதல் 4 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்குமாறு மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது
3. டெல்லியில் கடந்த 76 ஆண்டுகளில் இல்லாதவகையில் அதிகபட்ச வெப்பநிலை பதிவு
டெல்லியில் கடந்த 76 ஆண்டுகளில் இல்லாதவகையில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
4. தமிழகத்தில் 20 மாவட்டங்களில் இயல்பைவிட வெப்பநிலை உயரும் வானிலை மையம் எச்சரிக்கை
ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் தமிழகத்தில் 20 மாவட்டங்களில் இயல்பைவிட வெப்பநிலை உயரும் வானிலைமைஅயம் எச்சரிக்கை
5. டெல்லியில் 76 ஆண்டுகளில் இல்லாத வகையில் அதிகபட்ச வெப்பநிலை
டெல்லியில் அதிகபட்ச வெப்பநிலை 104.18 டிகிரி பாரன்ஹீட்டாக (40.1 டிகிரி செல்சியஸ்) பதிவாகி இருந்தது.