தேசிய செய்திகள்

இந்த ஆண்டு சீனாவின் பொருளாதார வளர்ச்சியை விட இந்தியாவின் வளர்ச்சி அதிகமாகும் - சர்வதேச நாணய நிதியம் + "||" + Expected growth of 12.5% for India but “ very severe downside risks” due to COVID wave: IMF

இந்த ஆண்டு சீனாவின் பொருளாதார வளர்ச்சியை விட இந்தியாவின் வளர்ச்சி அதிகமாகும் - சர்வதேச நாணய நிதியம்

இந்த ஆண்டு சீனாவின் பொருளாதார  வளர்ச்சியை விட இந்தியாவின் வளர்ச்சி அதிகமாகும் -  சர்வதேச நாணய நிதியம்
இந்த ஆண்டு சீனாவின் பொருளாதார வளர்ச்சியை விட இந்தியாவின் வளர்ச்சி அதிகமாக இருக்கும் என சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது.
புதுடெல்லி

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு 12.5 சதவீதம் ஆக இருக்கும் என சர்வதேச நாணய நிதியம்  கணித்துள்ளது. 

அமெரிக்காவில் உள்ள சர்வதேச நிதியம் ஐ.எம்.எப். வருடாந்திர உலக பொருளாதார மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், 2022ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.9 சதவீதமாக இருக்கும். அதேநேரம் கடந்த ஆண்டு கொரோனாவால் அனைத்து நாட்டு பொருளாதாரங்களும் வீழ்ச்சியடைந்த போதும் வளர்ச்சி அடைந்த ஒரே நாடான சீனாவின் பொருளாதாரம் இந்த ஆண்டு 8.6 சதவீதம் அளவுக்கே உயரும்.

சர்வதேச அளவில் மைனஸ் 3.3 சதவீதம் வீழ்ச்சி கண்ட சர்வதேச பொருளாதாரம் இந்த ஆண்டு 6 சதவீதம் வளர்ச்சி அடையும் என கூறப்பட்டு உள்ளது.

கடந்த ஜனவரி மாதம் சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டிருந்த அறிக்கையில், 2021-2022 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 11.5 சதவீதமாக இருக்கும் என கூறியிருந்த நிலையில், தற்போது அதனை உயர்த்தி இருக்கிறது குறிப்பிடத்தக்கது. மேலும் வருடாந்திர உலக பொருளாதார மதிப்பீட்டு அறிக்கையில், நடப்பு ஆண்டில் உலக பொருளாதார வளர்ச்சி 6 சதவீதமாகவும், அடுத்த ஆண்டு 4.4 சதவீதமாகவும் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது

இந்தியாவில் பொருளாதார நடவடிக்கைகள் இயல்பாக்கப்பட்டதற்கான சான்றுகள் உள்ளன என்று சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் ஆண்டு வசந்த கூட்டத்திற்கு முன்னதாக தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்திய பொருளாதாரம் தொற்றுநோய்க்கு முந்தைய நிலையை அடைய இரண்டு வருடங்கள் ஆகும் - தலைமை பொருளாதார ஆலோசகர்
இந்திய பொருளாதாரம் தொற்றுநோய்க்கு முந்தைய நிலையை அடைய இரண்டு வருடங்கள் ஆகும் என தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் கூறி உள்ளார்.
2. இந்திய பொருளாதாரம் படிப்படியாக மீண்டு வருகிறது - சர்வதேச நிதியம் தகவல்
இந்திய பொருளாதாரம் படிப்படியாக மீண்டு வருவதாக சர்வதேச நிதியம் தகவல் தெரிவித்துள்ளது.
3. 2-வது காலாண்டில் சரிவு 7.5 சதவீதம்தான்: இந்திய பொருளாதாரம் மீள்கிறது
கட்டுமான துறை முதல் காலாண்டில் 50 சதவீத சரிவை சந்தித்துள்ள நிலையில், 2-வது காலாண்டில் 8.6 சதவீதம் மட்டுமே வீழ்ச்சி கண்டுள்ளது.
4. இந்தியாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தி இரண்டாவது காலாண்டில் -7.5 சதவீதமாக சரிவு
இந்தியாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தி இரண்டாவது காலாண்டில் -7.5 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளது.