மாநில செய்திகள்

பொதுமக்களிடம் கட்டுப்பாடு இல்லை, ஊரடங்கு நடைமுறையும் அமலில் இல்லை - கொரோனா பரவல் குறித்து உயர்நீதிமன்றம் கவலை + "||" + The public has no control and the curfew is not in place - the High Court is concerned about the spread of the corona

பொதுமக்களிடம் கட்டுப்பாடு இல்லை, ஊரடங்கு நடைமுறையும் அமலில் இல்லை - கொரோனா பரவல் குறித்து உயர்நீதிமன்றம் கவலை

பொதுமக்களிடம் கட்டுப்பாடு இல்லை, ஊரடங்கு நடைமுறையும் அமலில் இல்லை - கொரோனா பரவல் குறித்து உயர்நீதிமன்றம் கவலை
பொதுமக்களிடம் கட்டுப்பாடு இல்லை, ஊரடங்கு நடைமுறையும் அமலில் இல்லை என்று கொரோனா பரவல் குறித்து உயர்நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.
சென்னை, 

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 3,986 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 

இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 9,11,110 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்த போதிலும் பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாததால் கொரோனா வைரஸ் அளவுக்கு அதிகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது.

இதன்படி தினந்தோறும் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும்நிலையில், பொதுமக்களிடம் கட்டுப்பாடு இல்லை, ஊரடங்கு நடைமுறையும் அமலில் இல்லை என்று உயர்நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வழக்கு ஒன்றின் விசாரணைக்கு, தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் காணொளி மூலமாக ஆஜராகி இருந்தார். அப்போது தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாரயணனிடம், “தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனை மிகத் தீவிர பிரச்சனையாக கருத வேண்டும். ஆனால், எந்த விதமான ஊரடங்கு கட்டுப்பாடுகளும் இல்லை. பொதுமக்களும் முகக் கவசம் அணிவதில்லை. தனி மனித இடைவெளி பின்பற்றுவதில்லை. 

மக்களிடம் கட்டுப்பாடு இல்லாதது, கொரோனா பரவலுக்கு அதிக வாய்ப்பாக அமைந்துவிடும். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாகவும் நோய் தாக்கத்தை குறைக்கும் வகையிலும் பொதுமக்களுக்கு தேவையான அறிவுரை மற்றும் நோய் தடுப்புக்கு தேவையான மாற்றத்தை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்” என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். 


தொடர்புடைய செய்திகள்

1. பொதுமக்கள் மத்தியில் கொரோனா விழிப்புணர்வு அதிகரித்து உள்ளது; சென்னை போலீஸ் கமிஷனர் பேச்சு
பொதுமக்கள் மத்தியில் கொரோனா குறித்த விழிப்புணர்வு அதிகரித்து உள்ளதாக சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்தார்.
2. போதிய பயணிகள் வருகை இல்லாததால் 12 ரயில்கள் ரத்து - ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு
போதிய பயணிகள் வருகை இல்லாததால் 12 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
3. பொதுமக்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி போட்டு கொள்ளவேண்டும் மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்
சென்னையை அடுத்த தாம்பரம், பொதுமக்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி போட்டு கொள்ளவேண்டும் மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்.
4. பதஞ்சலி வளாகத்தில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை: யோகா குரு பாபா ராம்தேவ்
பதஞ்சலி வளாகத்தில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என யோகா குரு பாபா ராம்தேவ் கூறியுள்ளார்.
5. குடவாசல் அருகே 151 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட புனித சூசையப்பர் ஆலயம் சீரமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
குடவாசல் அருகே 151 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட புனித சூசையப்பர் ஆலயம் சீரமைக்கப்படுமா? என்று ெபாதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.