தேசிய செய்திகள்

மராட்டியத்தில் இன்று ஒரேநாளில் 59,907 பேருக்கு கொரோனா - 322 பேர் பலி + "||" + Maharashtra reports 59,907 new Coronavirus Cases in a Single Day

மராட்டியத்தில் இன்று ஒரேநாளில் 59,907 பேருக்கு கொரோனா - 322 பேர் பலி

மராட்டியத்தில் இன்று ஒரேநாளில் 59,907 பேருக்கு கொரோனா - 322 பேர் பலி
மராட்டிய மாநிலத்தில் இன்று ஒரேநாளில் 59 ஆயிரத்து 907 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை,

இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, மராட்டிய மாநிலத்தில் கொரோனா பரவல் உச்சமடைந்து வருகிறது. இந்நிலையில், மராட்டியத்தில் கொரோனா வைரஸ் பரவலின் இன்றைய நிலவரத்தை அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, மராட்டியத்தில் இன்று ஒரேநாளில் 59 ஆயிரத்து 907 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 31 லட்சத்து 73 ஆயிரத்து 261 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 5 லட்சத்து 1 ஆயிரத்து 559 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாநிலத்தில் வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை பெற்றவர்களில் இன்று ஒரேநாளில் 30 ஆயிரத்து 296 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால், மராட்டியத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 26 லட்சத்து 13 ஆயிரத்து 627 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு அம்மாநிலத்தில் இன்று 322 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மராட்டியத்தில் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 56 ஆயிரத்து 652 ஆக அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவில் இன்று 3,502 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - 16 பேர் பலி
கேரளாவில் இன்று 3,502 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. தங்கள் தோல்விகளில் இருந்து கவனத்தை திசைதிருப்ப சில மாநில அரசுகள் முயற்சிக்கின்றன - மத்திய சுகாதாரத்துறை மந்திரி குற்றச்சாட்டு
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதில் தங்கள் தோல்விகளில் இருந்து கவனத்தை திசைதிருப்ப சில மாநில அரசுகள் முயற்சிக்கின்றன என்று மத்திய சுகாதாரத்துறை மந்திரி குற்றஞ்சாட்டியுள்ளார்.
3. மராட்டியத்தில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை- சுகாதாரத்துறை மந்திரி தகவல்
மராட்டியத்தில் இதுவரை 82 லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
4. நாட்டின் எந்த பகுதியிலும் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இல்லை - மத்திய சுகாதாரத்துறை மந்திரி தகவல்
நாட்டின் எந்த பகுதியிலும் கொரோனா தடுப்பூசிக்கு தடுப்பாடு இல்லை என்று மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.
5. மராட்டியத்தில் இன்று ஒரேநாளில் 55,469 பேருக்கு கொரோனா - 297 பேர் பலி
மராட்டிய மாநிலத்தில் இன்று ஒரேநாளில் 55 ஆயிரத்து 469 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.