தேசிய செய்திகள்

தேர்தல் நடத்தை விதிமீறல்: மம்தா பானர்ஜிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் + "||" + Election Commission issues notice to Mamata Banerjee over minority vote appeal

தேர்தல் நடத்தை விதிமீறல்: மம்தா பானர்ஜிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

தேர்தல் நடத்தை விதிமீறல்: மம்தா பானர்ஜிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
தேர்தல் நடத்தை விதிகளை மீறிய புகாருக்கு பதிலளிக்க மம்தா பானர்ஜிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கொல்கத்தா, 

மேற்கு வங்காளத்தில் 8 கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்தப்படும் நிலையில், நேற்றுடன் 3வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. வரும் ஏப்.10-ஆம் தேதி நான்காம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.  

மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், அம்மாநில முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி மீது பா.ஜ.க. மூத்த தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார். அதில், தேர்தல் நடக்க உள்ள கூஜ் பெகார் என்ற பகுதியில் முஸ்லிம் வாக்காளர்கள் பெருமளவு உள்ளனர். இங்கு முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது முஸ்லிம்களின் வாக்கு வங்கியை குறி வைத்து மதரீதியாகவும், பிரிவினை தூண்டும் விதமாகவும் பிரசாரம் செய்தார் என்றும், இது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி, தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறியதாகும். இதனால் மம்தா பானர்ஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிகளை மீறிய புகாருக்கு பதிலளிக்க மம்தா பானர்ஜிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக 48 மணி நேரத்திற்குள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. மேற்கு வங்காளம் தேர்தல்: மம்தாவின் கோரிக்கையை நிராகரித்த தேர்தல் ஆணையம்
மேற்கு வங்காளத்தில் எஞ்சி இருக்கும் 4 கட்ட தேர்தல்களை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்ற மம்தாவின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்து உள்ளது.
2. சட்டசபை தேர்தல் மேற்குவங்காளத்தில் 4 கட்ட தேர்தலுக்கு பிறகு ராகுல் காந்தி பிரசாரம்
காங்கிரசின் முக்கியத் தலைவரான ராகுல் காந்தி நேற்று மேற்குவங்காளத்தில் 4 கட்ட தேர்தலுக்கு பிறகு முதல்முறையாகப் அங்கு பிரசாரம் செய்தார்.
3. கொரோனாவை பரப்பிவிட்டு ஓடிவிட்டார்கள் குற்றம்சாட்டிய மம்தா பானர்ஜி ; பதிலடி கொடுத்த ஸ்மிருதி இரானி
கொரோனாவை பரப்பிவிட்டு ஓடிவிட்டார்கள் என மம்தா பானர்ஜி பா.ஜனதாவை குற்றம்சாட்டி உள்ளார். இதற்கு மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி பதிலடி கொடுத்து உள்ளார்.
4. இதுபோன்ற ஒரு பிரதமரை இதற்கு முன்பு நான் பார்த்ததில்லை;நான் மிகவும் வெட்கப்படுகிறேன்- மம்தா பானர்ஜி
நான் மிகவும் வெட்கப்படுகிறேன், வேதனைப் படுகிறேன் இதுபோன்ற ஒரு பிரதமரை இதற்கு முன்பு நான் பார்த்ததில்லை என தேர்தல் பிரசாரத்தில் மம்தா பானர்ஜி பேசி உள்ளார்.
5. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுடன், மத்திய படைகளை அவமதிக்க வேண்டாம் மம்தா பானர்ஜிக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்
ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுடன், மத்திய படைகளை அவமதிக்க வேண்டாம் என முதல்வர் மம்தா பானர்ஜியிடம் பிரதமர் மோடி கேட்டு கொண்டார்.