மாநில செய்திகள்

நெல்லையில் இருந்து இயக்கப்படும் பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு + "||" + Connection of extra boxes on the Balaruvi Express train operating from Nellai

நெல்லையில் இருந்து இயக்கப்படும் பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

நெல்லையில் இருந்து இயக்கப்படும் பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
நெல்லையில் இருந்து இயக்கப்படும் பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.
மதுரை,

மதுரை கோட்டத்துக்கு உள்பட்ட நெல்லை ரெயில் நிலையத்தில் இருந்து தென்காசி, செங்கோட்டை, கொல்லம் வழியாக கேரள மாநிலம் பாலக்காடுக்கு பாலருவி எக்ஸ்பிரஸ் இயக்கப்படுகிறது. இந்த ரெயிலில் பயணிகளின் வசதிக்காக தற்போது கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. 

அதன்படி, பாலக்காடு ரெயில் நிலையத்தில் இருந்து நாளை (வெள்ளிக்கிழமை) முதல் இயக்கப்படும் ரெயிலிலும், நெல்லையில் இருந்து இன்று (வியாழக்கிழமை) முதல் இயக்கப்படும் ரெயிலிலும் கூடுதலாக 2 இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. ஏற்கனவே, இந்த ரெயிலில் 8 இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகள் உள்ளன. அதன்படி, இந்த ரெயிலில் அனைத்து வகுப்பு பெட்டிகளையும் சேர்த்து, தற்போது 16 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.