தேசிய செய்திகள்

பருவநிலை மாற்றத்துக்கான அமெரிக்க சிறப்பு தூதர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு + "||" + US Special Presidential Envoy for Climate John Kerry called on PM Narendra Modi

பருவநிலை மாற்றத்துக்கான அமெரிக்க சிறப்பு தூதர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு

பருவநிலை மாற்றத்துக்கான அமெரிக்க சிறப்பு தூதர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு
பருவநிலை மாற்றத்துக்கான அமெரிக்க சிறப்பு தூதர் பிரதமர் மோடியை சந்தித்தார்.
புதுடெல்லி, 

பருவநிலை மாற்றத்துக்கான அமெரிக்க ஜனாதிபதியின் சிறப்பு தூதரான ஜான் கெர்ரி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இதன் ஒரு பகுதியாக நேற்று பிரதமர் மோடியை அவர் சந்தித்து பேசினார்.

அப்போது பருவநிலை மாற்ற பிரச்சினைகள் குறித்து இருவரும் விவாதித்தனர். அத்துடன் அமெரிக்க நடத்தும், உலகின் 40 நாட்டு தலைவர்கள் பங்கேற்கும் பருவநிலை மாற்ற உச்சி மாநாடு குறித்தும் இருவரும் ஆலோசனை நடத்தினர்.

மேலும் ஐ.நா.வின் பருவநிலை மாற்ற மாநாடு, பருவநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா. கட்டமைப்பு மாநாடு ஆகியவை குறித்தும் பிரதமர் மோடியுடன் ஜான் கெர்ரி ஆலோசனை நடத்தினார்.

முன்னதாக மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர், சுற்றுச்சூழல் மந்திரி பிரகாஷ் ஜவடேகர் ஆகியோரையும் அவர் தனித்தனியாக சந்தித்து பேசினார்.