தேசிய செய்திகள்

கொரோனா மீண்டும் அதிகரிப்பு: கேரளாவில் கட்டுப்பாடுகளை கடுமையாக்க முடிவு + "||" + Corona back increase: Decision to tighten restrictions in Kerala

கொரோனா மீண்டும் அதிகரிப்பு: கேரளாவில் கட்டுப்பாடுகளை கடுமையாக்க முடிவு

கொரோனா மீண்டும் அதிகரிப்பு: கேரளாவில் கட்டுப்பாடுகளை கடுமையாக்க முடிவு
கொரோனாவின் 2-வது அலை தீவிரமடைந்து வருவதை கருத்தில் கொண்டு கேரளாவில் கட்டுப்பாடுகளை கடுமையாக்க முடிவு செய்யப்பட்டது.
திருவனந்தபுரம், 

கேரளாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. நேற்று 3,502 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. தினசரி பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மொத்த பலி எண்ணிக்கை 4,710 ஆக உயர்ந்து உள்ளது.

இந்த நிலையில் நேற்று கேரள தலைமை செயலாளர் ஜாய் தலைமையில் கொரோனா கண்காணிப்பு உயர் மட்ட குழு கூட்டம் திருவனந்தபுரத்தில் நடந்தது. கூட்டத்தில், கொரோனாவின் 2-வது அலை தீவிரமடைந்து வருவதை கருத்தில் கொண்டு கட்டுப்பாடுகளை கடுமையாக்க முடிவு செய்யப்பட்டது. 

மேலும், வெளிநாடுகள், அண்டை மாநிலங்களில் இருந்து வருவோரை 7 நாட்கள் தனிமைப்படுத்த ஏற்கனவே உள்ள உத்தரவு தொடரும். முக கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். போலீசார் மூலம் தீவிர பரிசோதனை மேற்கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவில் 10:15 மணி நிலவரப்படி 21.5 சதவீத வாக்குகள் பதிவு
காலை 9:11 மணி வரை மேற்கு வங்காளத்தில் - 4.88 சதவீத வாக்குகளும் அசாமில் - 0.93 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளது
2. கொரோனா பரவல் எதிரொலி: கேரளாவில் இறுதிக்கட்ட பெருந்திரள் பிரசாரத்துக்கு தேர்தல் கமிஷன் தடை
கொரோனா பரவல் எதிரொலியாக கேரளாவில் இறுதிக்கட்ட பெருந்திரள் பிரசாரத்துக்கு தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது.
3. கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,389- பேருக்கு கொரோனா தொற்று
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,389- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. சட்டமன்ற தேர்தல்: கேரளாவில் வருகிற 6-ந் தேதி பொதுவிடுமுறை அறிவிப்பு
சட்டமன்ற தேர்தலையொட்டி கேரளாவில் வருகிற 6-ந் தேதி பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
5. மாடியில் இருந்து விழுந்தவரை காப்பாற்றும் திரைப்படத்தை மிஞ்சும் வகையில் சம்பவம் -வீடியோ
திரைப்படத்தை மிஞ்சும் வகையில் சாகச சம்பவம் ஒன்றை நிகழ்த்தி கேரளாவில் பாபு என்பவர் பிரபலமடைந்து உள்ளார்.