உலக செய்திகள்

இந்தோனேசியாவில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 126 ஆக உயர்வு + "||" + Indonesia Landslides Death Toll Rises To 126, Dozens Missing

இந்தோனேசியாவில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 126 ஆக உயர்வு

இந்தோனேசியாவில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 126 ஆக உயர்வு
இந்தோனேசியாவில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 126 ஆக உயர்ந்துள்ளது.
ஜகார்த்தா,

இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் உள்ள நுசா தெங்கரா மாகாணத்தில்கடந்த சில தினங்களுக்கு முன் இரவு தொடங்கி விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது.

இதன் காரணமாக அங்குள்ள பல கிராமங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தொடர் மழை காரணமாக அங்குள்ள ஆறுகளில் இருந்து சேறும் சகதியுமாக வெள்ள நீர் வெளியேறி ஊர்களுக்குள் புகுந்து.

கனமழை மற்றும் வெள்ளத்தை தொடர்ந்து லாமெனெலே என்ற மலை கிராமத்தில் பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டது. சுமார் 50 வீடுகள் மீது மண் சரிந்து விழுந்தது‌.

இதில் அந்த வீடுகளில் இருந்த ஏராளமானோர் உயிரோடு மண்ணில் புதைந்தனர்.  இந்தநிலையில்  பயங்கர நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 126 ஆக அதிகரித்துள்ளது. இடிபாடுகளில் சிக்கி இன்னும் பலர் மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணி முழுவீச்சில் நடந்து விடுகிறது.