மாநில செய்திகள்

சதுரகிரி மலைக்கு செல்ல 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி + "||" + Devotees are allowed to go to Sathuragiri hill for 4 days

சதுரகிரி மலைக்கு செல்ல 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி

சதுரகிரி மலைக்கு செல்ல 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி
பங்குனி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி கோவிலுக்கு செல்ல 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வத்திராயிருப்பு,

வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 12-ந் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையில் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் முககவசம் கட்டாயம் அணிந்து வரவும், 10 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள், முதியவர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் எனவும் கோவில் நிர்வாகத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இரவு நேரங்களில் பக்தர்கள் மலையின் மேல் தங்குவதற்கு அனுமதி இல்லை. பக்தர்களுக்கு தேவையான வசதிகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, கோவில் செயல் அலுவலர் ஆகியோர் செய்துள்ளனர்.