தேசிய செய்திகள்

மராட்டிய உள்துறை மந்திரி விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை + "||" + Maratha Home Minister affair Trial today in the Supreme Court

மராட்டிய உள்துறை மந்திரி விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

மராட்டிய உள்துறை மந்திரி விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
அனில் தேஷ்முக்குக்கு எதிரான ஊழல் புகார்களை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிடக் கோரி மும்பை ஐகோர்ட்டில் மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் மனு தாக்கல் செய்தார்.
புதுடெல்லி, 

மராட்டிய உள்துறை மந்திரியாக இருந்த அனில் தேஷ்முக்குக்கு எதிரான ஊழல் புகார்களை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிடக் கோரி மும்பை ஐகோர்ட்டில் மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவை ஐகோர்ட்டு விசாரணைக்கு ஏற்றது. மேலும், அனில் தேஷ்முக்குக்கு எதிராக தெரிவிக்கப்பட்டுள்ள ஊழல் புகார்கள் குறித்த முதல்கட்ட விசாரணையை நடத்தி 15 நாட்களுக்குள் அறிக்கை அளிக்க சி.பி.ஐ.க்கு திங்கட்கிழமை உத்தரவிட்டது. அதையடுத்து, மராட்டிய உள்துறை மந்திரி பதவியை அனில் தேஷ்முக் ராஜினாமா செய்தார். இந்த நிலையில், மும்பை ஐகோர்ட்டின் இந்த உத்தரவுக்கு எதிராக மராட்டிய அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று முன்தினம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் எஸ்.கே.கவுல், ஹேமந்த் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரிக்கிறது.