உலக செய்திகள்

அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியால் ரத்தம் உறைய அரிதான வாய்ப்பு - ஐரோப்பிய நிறுவனம் அறிவிப்பு + "||" + Rare chance of blood clotting due to Astra Geneca corona vaccine - European company announcement

அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியால் ரத்தம் உறைய அரிதான வாய்ப்பு - ஐரோப்பிய நிறுவனம் அறிவிப்பு

அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியால் ரத்தம் உறைய அரிதான வாய்ப்பு - ஐரோப்பிய நிறுவனம் அறிவிப்பு
அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியால் ரத்தம் உறைய அரிதான வாய்ப்பு உள்ளதாக ஐரோப்பிய நிறுவனம் அறிவித்துள்ளது.
லண்டன்,

ஆகஸ்போர்டு மற்றும் அஸ்ட்ராஜெனேகா நிறுவனங்கள் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசி ஒன்று உலக அளவில் பல நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. இந்த தடுப்பூசியை இந்தியாவின் சீரம் நிறுவனமும் கோவிஷீல்டு என்ற பெயரில் தயாரித்து நாடு முழுவதும் போடப்பட்டு வருகிறது.

இந்த தடுப்பூசியால் ஐரோப்பிய நாடுகளில் பலருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டதாக கூறி பல நாடுகள் இதற்கு இடைக்கால தடையும் விதித்து இருந்தன.

இந்த நிலையில் அரிதான ரத்தம் உறைதலுக்கும், இந்த தடுப்பூசிக்கும் சாத்தியமான தொடர்பு இருப்பதை கண்டுபிடித்துள்ளதாக ஐரோப்பிய யூனியனின் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு கூறியுள்ளது.

இந்த அமைப்பின் சுகாதார அச்சுறுத்தல் மற்றும் தடுப்பூசி பிரிவின் தலைவர் மார்கோ கவாலெரி கூறுகையில், ‘மிகவும் அரிதான ரத்தம் உறைதலுக்கும், அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிக்கும் தொடர்பு இல்லை என்பதை உறுதிப்படுத்துவது மிக மிக கடினம்’ என்று தெரிவித்தார்.

இதுகுறித்து தொடர்ந்து ஆய்வுகள் நடந்து வருவதாக கூறிய அவர், அதேநேரம் தடுப்பூசியின் பலன்கள் அபாயங்களை விட அதிகமாகவே இருப்பதாக தெரிவித்தார்.