தேசிய செய்திகள்

10, 12ம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர்களுக்கு கேரள முதல் மந்திரி வாழ்த்து + "||" + Kerala CM congratulates 10th and 12th class students

10, 12ம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர்களுக்கு கேரள முதல் மந்திரி வாழ்த்து

10, 12ம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர்களுக்கு கேரள முதல் மந்திரி வாழ்த்து
கேரளாவில் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர்களுக்கு முதல் மந்திரி பினராயி விஜயன் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
திருவனந்தபுரம்,

நாட்டிலேயே கொரோனா பாதிப்பு முதன்முறையாக கண்டறியப்பட்ட கேரளாவில், 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் 17ந்தேதி தொடங்கி 30ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.  ஆனால், கேரளாவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தல்களை முன்னிட்டு தேர்வு தள்ளி வைக்கப்பட்டது.

இதற்காக கேரள அரசு தேர்தல் ஆணையத்திடம் கடந்த மார்ச்சில் வேண்டுகோள் வைத்தது.  இதனை ஆணையம் ஏற்று கொண்டு ஒப்புதல் அளித்தது.  இதனையடுத்து ஏப்ரல் 2வது வாரம் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.  அதன்படி, இன்று அந்த தேர்வு நடைபெறுகிறது.

கேரளாவில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான தேர்வை லட்சக்கணக்கான மாணவர்கள் எழுதுகின்றனர்.  கேரளா தவிர்த்து வளைகுடா பகுதி மற்றும் லட்சத்தீவிலும் 9 தேர்வெழுதும் மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

இதனை முன்னிட்டு மாணவர்களுக்கு முதல் மந்திரி பினராயி விஜயன் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.  அவர் வெளியிட்டு உள்ள டுவிட்டர் செய்தியில், 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகள் தொடங்குகின்றன.  கொரோனா விதிமுறைகளை அனைத்து மாணவ மாணவியர்களும் பின்பற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்.  அதனால், உங்களுடைய நண்பர்கள், ஆசிரியர்கள் மற்றும் குடும்பத்தினர் பாதுகாப்புடன் இருக்க முடியும்.

உங்கள் ஒவ்வொருவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்.  அனைவரும் வெற்றி பெற வாழ்த்துகிறேன் என தெரிவித்து உள்ளார்.

கொரோனா விதிகளை பின்பற்றி தேர்வுகள் நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.  கொரோனா பாதிப்பு அறிகுறிகளுடன் உள்ள மாணவர்கள் மற்றும் கொரோனா சிகிச்சை மையத்தில் உள்ள மாணவர்கள் தனியறையில் தேர்வு எழுத வைக்கப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தாதாசாகேப் பால்கே விருது: நடிகர் ரஜினிகாந்துக்கு, கவர்னர் வாழ்த்து
சினிமா துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தோருக்கு மத்திய அரசு வழங்கும் உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
2. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள்: தகுதி பெற்ற இந்திய டேபிள் டென்னிஸ் வீரர்களுக்கு வாழ்த்து
இந்திய டேபிள் டென்னிஸ் வீரர்கள் சத்தியன் ஞானசேகரன் உள்ளிட்டோர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.
3. தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பிறந்தநாள்; பெரியார் நினைவிடத்தில் மரியாதை
தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தனது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னையில் உள்ள பெரியார் நினைவிடத்தில் மலர்தூவியும், மலர் வளையம் வைத்தும் மரியாதை செலுத்தினார்.
4. அமெரிக்காவின் 46வது ஜனாதிபதியாக பதவி ஏற்ற ஜோ பைடனுக்கு உலக தலைவர்கள் வாழ்த்து
அமெரிக்காவின் 46வது ஜனாதிபதியாக பதவி ஏற்று கொண்ட ஜோ பைடனுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
5. நடிகர் ரஜினிகாந்த் நலம் பெற டுவிட்டரில் கமல்ஹாசன் வாழ்த்து
நண்பர் நலம் பெற வாழ்த்துக்கள் என மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்துக்கு கமல்ஹாசன் டுவிட்டர் வழியே வாழ்த்து பதிவிட்டு உள்ளார்.