உலக செய்திகள்

இந்தியாவில் இருந்து நியூசிலாந்து வரும் பயணிகளுக்கு தற்காலிக தடை விதிப்பு - நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் + "||" + Temporary ban on travelers from India to New Zealand - New Zealand Prime Minister Jacinda Ardern

இந்தியாவில் இருந்து நியூசிலாந்து வரும் பயணிகளுக்கு தற்காலிக தடை விதிப்பு - நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன்

இந்தியாவில் இருந்து நியூசிலாந்து வரும் பயணிகளுக்கு தற்காலிக தடை விதிப்பு - நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன்
கொரோனா தொற்று அதிகரிப்பு எதிரொலியாக இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு நியூசிலாந்து அரசு தடை விதித்துள்ளது.
வெல்லிங்டன்,

இந்தியாவில் கடந்த ஆண்டு வந்த கொரோனாவின் முதல் அலையைக் காட்டிலும், தற்போது வந்துள்ள இரண்டாவது அலையின் தாக்கம் மிக அதிக அளவில் இருக்கிறது. இதன்மூலம் கொரோனாவின் மோசமான பாதிப்புக்கு ஆளான நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, பிரேசிலைத் தொடர்ந்து இந்தியா 3-வது இடத்தில் நீடிக்கிறது. 

கடந்த 5 ஆம் தேதி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியாவில் முதல் முறையாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது. அதனை தொடர்ந்து நேற்றைய தினம் 1,15,736 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதன் மூலம், ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் புதிய உச்சத்தை எட்டியது.

இந்நிலையில் தொற்று அதிகரிப்பு எதிரொலியாக இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு நியூசிலாந்து அரசு தடை விதித்துள்ளது. இந்தியாவில் இருந்து வரும் அனைத்து பயணிகள், சொந்த குடிமக்கள் உள்பட அனைவருக்கும் நியூசிலாந்து வர தற்காலிகமாக அனுமதியில்லை என நியூசிலாந்து பிரதமர் ஜெசிண்டா தெரிவித்துள்ளார். இந்த தடை ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் ஏப்ரல் 28 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று அவர் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 20 ஓவர் தொடரை வென்றது நியூசிலாந்து
ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நேற்று நடந்தது.
2. நியூசிலாந்தில் தொடர்ந்து 4 சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ; சுனாமி எச்சரிக்கை
நியூசிலாந்தில் தொடர்ந்து 4 சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ; சுனாமி எச்சரிக்கை ஆயிரகணக்கான மக்கள் வெளியேற்றம்
3. பைசர் தடுப்பூசிக்கு நியூசிலாந்து அரசு ஒப்புதல்
கொரோனாவுக்கு எதிரான பைசர் தடுப்பூசிக்கு நியூசிலாந்து அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
4. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி: இந்திய அணி நாளை அறிவிப்பு
இந்தியா- இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.